ஹெலிகாப்டரை வாங்கிய ஜோஸ் ஆலுக்காஸ்… ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதன் தொழில்நுட்ப அம்சங்கள்!!
ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் வாங்கியுள்ள நவீன ரக ஹெலிகாப்டரில் உள்ள தொழில்நுட்ப அம்சங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் வாங்கியுள்ள நவீன ரக ஹெலிகாப்டரில் உள்ள தொழில்நுட்ப அம்சங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஜோஸ் ஆலுக்காஸ். இந்த நிறுவனம் இந்தியா, துபாய், ஐக்கிய அரபு எமிரேட், பிரிட்டன், மலேசியா மற்றும் அமெரிக்கா உள்பட பல நாடுகளில் 100க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்தியாவில் மட்டும் 85 கடைகளும் வெளிநாட்டில் 45 கடைகளும் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் ஜோஸ் ஆலுக்காஸ் விலை உயர்ந்த, ஆடம்பரமான லியோனார்டோ AW 109 GrandNew என்ற இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கியுள்ளது.
இதையும் படிங்க: திமிங்கல வாந்தியை கடத்திய 4 பேர் கைது… ரூ.10 கோடி மதிப்பிலான திமிங்கல வாந்தி பறிமுதல்!!
இதன் விலை சுமார் 90 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த109 GrandNew ஹெலிகாப்டர் நவீன இரட்டை எஞ்சின், மேம்பட்ட தொழில்நுட்பம், உயர் செயல்திறன் திறன்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த ஹெலிகாப்டரில் நேர்த்தியான உட்புறங்கள், கலை வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் கண்ணாடி காக்பிட் ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் ஆடம்பரமான வசதியான இருக்கை கட்டமைப்பு போன்ற நவீன அம்சங்களுடன் 109 GrandNew அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யாத்திரை தொடங்கிய நேரத்தில் சோனியாகாந்தியிடம் இருந்து வந்த ‘மெசேஜ்’ - இதென்னப்பா கடைசியில் ட்விஸ்ட்
நிகரற்ற செயல்திறன், சக்திவாய்ந்த இரட்டை FADEC PWC இன்ஜின்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் இதில் உள்ளது. இதுக்குறித்து இந்தியாவின் ஜோஸ் ஆலுக்காஸ் நிர்வாக இயக்குநர் ஜாய் ஆலுக்காஸ் கூறுகையில், Leonardo AW 109 GrandNew ஹெலிகாப்டர் ஒரு சிறந்த வகையாக உள்ளது. எங்கள் மூத்த நிர்வாகக் குழு இந்தியாவில் உள்ள எங்கள் கிளைகளுக்கு தடையின்றி பயணம் செய்ய உதவும் வகையில் இதனை நாங்கள் வாங்கியுள்ளோம். இந்த ஹெலிகாப்டர் ஒரு ஸ்டைலான மற்றும் நேர்த்தியான வடிவமைப்பை கொண்டுள்ளது. மற்ற ஹெலிகாப்டருடன் ஒப்பிடமுடியாத தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.