ISRO LVM3-M2: 36 செயற்கைக்கோள்களுடன் LVM3-M2 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது: முழுவர்த்தக ரீதியாக முதல் பயணம்

36 பிராண்ட்பேண்ட் தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை சுமந்துகொண்டு, எல்விஎம்3-எம்2(LVM3-M2) ராக்கெட் நாளை காலை 12.07 மணிக்கு விண்ணில்  பாய்கிறது

ISRO is preparing for the first commercial launch of 36  satellites through heavy-lift rocket LVM3-M2

36 பிராண்ட்பேண்ட் தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை சுமந்துகொண்டு, எல்விஎம்3-எம்2(LVM3-M2) ராக்கெட் நாளை காலை 12.07 மணிக்கு விண்ணில்  பாய்கிறது

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி நிலையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து LVM3-M2 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது.

10 லட்சம் பேருக்கு வேலை! ரோஜ்கர் மேளா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இதுவரை இஸ்ரோ ஏவிய ராக்கெட்டுகளிலேயே  இந்த ராக்கெட் மிகப்பெரியதாகும். இந்த ராக்கெட் 43.5 மீட்டர் நீளம் கொண்டது, ஏறக்குறைய 8டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. 

இஸ்ரோ வர்த்தகரீதியான சேவையை அதாவது,வர்த்தகரீதியாக செயற்கைக்கோள்களை ஏவும் பணியில் ஈடுபடத் தொடங்கிவிட்டது. இதில் முழுமையாக, வெளிசெயற்கைக்கோள்களுக்கு மட்டும் ஒரு ராக்கெட்டை வடிவமைத்து முழுமையாக வர்த்தகச் செயல்பட்டை தொடங்குவது இதுதான் முதல்முறையாகும். 

ISRO is preparing for the first commercial launch of 36  satellites through heavy-lift rocket LVM3-M2

நியூஸ்பேஸ் இந்தியா லிமிட் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த நெட்வொர்க் அசோசியேட்ஸ் லிமிட்ட் ஆகியவற்றுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த 36 செயற்கைக்கோள்களும் ஏவப்படுகின்றன.

இஸ்ரோவின் அறிவிப்பின்படி, 36 செயற்கைக்கோளின் எடை 5,796 கிலோவாகும். முதல்முறையாக இந்த அளவு செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் முதல் இந்திய ராக்கெட் இதுவாகத்தான் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள், சபாநாயகர் மீது ஸ்வப்னா சுரேஷ் மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு..!

எல்விஎம்-3 எம்-2 ராக்கெட் முதல்முறையாக செயற்கைக்கோள்களை பூமியின் குறைந்த சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்துகிறு.அதாவது பூமியிலிருந்து 1200கி.மீ தொலைவில் செயற்கைக்கோள் நிறுத்தப்படுகிறது. ஜியோஸிங்ரனைஸ் டிரான்ஸ்பர் ஆர்பிட் போன்று அல்ல.
இஸ்ரோ அமைப்பு இதற்கு முன், ஜிஎஸ்எல்வி-எம்கே3 வகை ராக்கெட்டிலிருந்து 

எல்விஎம்-3 எம்-2 ராக்கெட்டை மேம்படுத்தி உருவாக்கியுள்ளது. டிஜிஓ ராக்கெட்டுகள் 4டன் எடை மட்டுமே சுமந்து செல்லும் திறன் கொண்டவை ஆனால், எல்இஓவில் 8டன் எடையை சுமந்து செல்ல முடியும். 
ஜிஎஸ்எல்வி-எம்கே3 ராக்கெட் இதற்கு முன் 4 முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது, அதில் குறிப்பாக சந்த்ராயன்-2 இந்த ராக்கெட் மூலம்தான் செலுத்தப்பட்டது. 

கேரளாவில் போலீஸ் டார்ச்சர்! ராணுவ வீரர், அவரின் சகோதரர் விரலை உடைத்து சித்தரவதை: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

செயற்கைக்கோள்கள் அனைத்தையும் பூமியின் குறைந்த சுற்றுவட்டப்பாதையில் எல்விஎம்-3 எம்-2 ராக்கெட் நிலைநிறுத்தும்போது, இஸ்ரோவுக்கு கூடுதலாக நம்பிக்கையும், உற்சாகமும் கிடைக்கும். 
எல்விஎம்-3 எம்-2 ராக்கெட் 3 நிலைகளைக் கொண்டது. முதல்நிலையில் திரவநிலை எரிபொருளும், 2ம்நிலையில் திரவஎரிபொருளும் மோட்டாரும், 3வது நிலையில் கிரயோஜெனிக் எஞ்சினும்இருக்கும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios