முன்னாள் அமைச்சர்கள், சபாநாயகர் மீது ஸ்வப்னா சுரேஷ் மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு..!

முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஸ்வப்னா சுரேஷ்ஷை கொச்சியில் உள்ள ஓட்டல் அறைக்கு தன்னை அழைத்ததாகவும், பி.ஸ்ரீராமகிருஷ்ணன் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு தன்னை தனியாக வரச் சொன்னதாகவும், தாமஸ் ஐசக் அவரை மூணாருக்கு அழைத்துச் செல்வதாக கூறியதாகவும் ஏசியாநெட்டுக்கு அளித்த பேட்டியில் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். 

Swapna Suresh made sexual allegations against former ministers kadakampally suresh

முன்னாள் அமைச்சர்கள் கடம்கம்பள்ளி சுரேந்திரன், தாமஸ் ஐசக், முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் மீது ஸ்வப்னா சுரேஷ் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஸ்வப்னா சுரேஷ்ஷை கொச்சியில் உள்ள ஓட்டல் அறைக்கு தன்னை அழைத்ததாகவும், பி.ஸ்ரீராமகிருஷ்ணன் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு தன்னை தனியாக வரச் சொன்னதாகவும், தாமஸ் ஐசக் அவரை மூணாருக்கு அழைத்துச் செல்வதாக கூறியதாகவும் ஏசியாநெட்டுக்கு அளித்த பேட்டியில் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- XBB variant: XBB ஓமைக்ரான் வைரஸ்: மீண்டும் கொரோனா அலை வரலாம்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Swapna Suresh made sexual allegations against former ministers kadakampally suresh

சதியூடே பத்மவியூகம் புத்தக வெளியீட்டு விழாவையொட்டி ஏசியாநெட் நியூஸிடம் பேசிய ஸ்வப்னா சுரேஷ், ''கடகம்பள்ளி சுரேந்திரனுக்கு அரசியல்வாதியாகும் தகுதி கூட இல்லை. முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தன்னிடம் கல்லூரி மாணவி போல் நடந்து கொண்டார்.  சிவசங்கருக்கு இந்த விஷயங்கள் அனைத்தும் தெரியும் என்றும் ஸ்வப்னா தெரிவித்தார்.

Swapna Suresh made sexual allegations against former ministers kadakampally suresh

மேலும், ஹயாத் ஹோட்டல் திறப்பு விழாவிற்கு கடகம்பள்ளி வந்ததாகவும், அங்கும் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் ஸ்வப்னா குற்றம் சாட்டியுள்ளார். ஹோட்டல் திறப்பு விழாவில் நானும் இருந்தேன். கடகம்பள்ளி என்னிடம் ஓட்டலில் ரூம் எடுக்கலாம் என்று கூறியிருந்தார். கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினேன். இதையடுத்து, கடகம்பள்ளி என் மீது கோபமாக இருந்தார்.

Swapna Suresh made sexual allegations against former ministers kadakampally suresh

முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் என்னை கல்லூரி மாணவி போல் நடத்தினார். இவர் தனது அலுவலக இல்லத்தில் மதுபான விருந்து ஒன்றின் போது தவறாக நடந்து கொண்டார். தனியாக அலுவலக இல்லத்திற்கு வருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். ஒருமுறை மூணாறுக்கு அழைத்தார் என்று ஸ்வப்னா கூறினார். இதற்கிடையில், ஸ்வப்னா சுரேஷின் பாலியல் புகார்களுக்கு தன்னால் பதில் அளிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். ஸ்வப்னா கூறியது குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்று கடகம்பள்ளி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-  10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.. இன்று ஒரே நாளில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை.. மாஸ் காட்டும் மோடி.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios