10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.. இன்று ஒரே நாளில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை.. மாஸ் காட்டும் மோடி.
பிரதமர் மோடி இன்று 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் 'ரோஜ்கர் மேளா' திட்டத்தை துவங்கி வைத்து, இன்றே 75,000 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார்.
பிரதமர் மோடி இன்று 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் 'ரோஜ்கர் மேளா' திட்டத்தை துவங்கி வைத்து, இன்றே 75,000 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார். நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் புரோஸ்கர் மேளா என்ற மாபெரும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். இன்று ஒரே நாளில் 75 ஆயிரம் பேருக்கு அவர் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் பங்குபெற உள்ளார்.
மத்திய பாஜக ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில் ஒன்றுதான் நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும், வேலையில்லா திண்டாட்டம் போக்கப்படும் என்பது. ஆனால் ஆட்சிக்கு வந்து இதுவரை எந்த பெரிய அளவில் வேலைவாய்ப்பு திட்டங்கள் எதையும் மோடி அரசு முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது, இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி திண்டாடுகின்றனர் என்ற விமர்சனம் பாஜக அரசு மீது தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: தமிழக மீனவர் சுடப்பட்ட விவகாரம்… வாய் திறக்காத வானதி சீனிவாசன்!!
முன்னதாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் நாடு முழுவதும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 8. 22 லட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நான் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அதனடிப்படையில் மத்திய அரசில் சுமார் 10 லட்சம் பணிகளை அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நிரப்பலாம் என மோடி உத்தரவிட்டார்.
அதற்கென்று சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில் ராணுவம், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய துறையின் அதிகாரிகள் இடம்பெற்றனர். நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்நிலையில்தான் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பிரதமர் மோடி ரோஜ்கர் மேளா என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைக்க உள்ளார். துவக்க விழாவில் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்வாகியுள்ள 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.
இதையும் படியுங்கள்: தமிழகத்தில் ஆளுநராக 4 ஆண்டுகள் இருந்தது மிக கொடுமை.. துணைவேந்தர் பதவி 40 கோடிக்கு விற்பனை.. பன்வாரிலால்.!
மத்திய அரசின் குரூப் A, குரூப் B, குரூப் C, ஆகிய பிரிவுகளில் பணியாற்றுவதற்கான ஆணைகள் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. மீதமுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் ரயில்வே துறை தேர்வாணையம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய ஆயுதப்படை காவலர்கள் உதவி ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், சுருக்கு எழுத்தாளர்கள், வருமானவரி ஆய்வாளர்கள் போன்றவர்களுக்கு இன்று பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.