கேரளாவில் போலீஸ் டார்ச்சர்! ராணுவ வீரர், அவரின் சகோதரர் விரலை உடைத்து சித்தரவதை: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் ராணுவ வீரர் அவரின் சகோதரரை போலீஸார் அடித்து, விரலை உடைத்து சித்ரவதை செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, 4 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் ராணுவ வீரர் அவரின் சகோதரரை போலீஸார் அடித்து, விரலை உடைத்து சித்ரவதை செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, 4 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கிள்ளிகொலூர் காவல் நிலைய ஆய்வாளர் கே.வினோத், துணை ஆய்வாளர்கள்ஏ.பி. அனீஷ், ஏஎஸ்ஐ பிரகாஷ் சந்திரன், மணிகண்டன் பிள்ளை ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது
கொல்லம் மாவட்டம், பேரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஷ்ணு, விக்னேஷ். இருவரும் சகோதரர்கள். இதில் விஷ்ணு ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி விக்னேஷுக்கு சம்மன் அனுப்பிய கிள்ளிகொலூர் போலீஸார், கரிகோட் ஜங்ஷன் பகுதியில் பிடிபட்ட எம்டிஎம்ஏ போதை வழக்கு தொடர்பாக விசாரிக்க அழைத்திருந்தனர்.
ஜேபி நட்டா உயிரோடு இருக்கும்போதே தெலங்கானாவில் கல்லறை: பாஜக கொந்தளிப்பு
இந்த வழக்கில் விக்னேஷ் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவில்லை, ஏனென்றால், விக்னேஷ் போலீஸ் தேர்வெழுதி, முடிவுக்காகக் காத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் அமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறார்
ராணுவத்தில் பணியாற்றிவரும் விஷ்ணு, திருமணம் தொடர்பாக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்குச் சென்ற விக்னேஷை போலீஸார் போலீஸ் நிலையத்தில் காத்திருக்கச் செய்தனர். அப்போது, அங்கு வந்த விஷ்ணு, தனது பைக்கை சகோதரர் விஷ்ணு எடுத்துவந்துவிட்டால் அதைத் தேடினார்.
போலீஸ் நிலையத்துக்கு வெளியே பைக்கே விஷ்ணு தேடியபோது, அங்கு நின்றிருந்த ஏஎஸ்ஐ பிரகாஷ் சந்திரனுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் விஷ்ணுவின் சட்டைபாக்கெட்டை பிரகாஷ் கிழித்தார்
பட்டியலினம், பழங்குடி பிரிவு இடஒதுக்கீடு திடீர் அதிகரிப்பு: கர்நாடக அரசு அவசரச் சட்டம்
இதைத் தொடர்ந்து விஷ்ணு காவல்நிலையத்துக்குள் சென்று தன் சட்டை பாக்கெட்டைக் கிழி்த்து தாக்கிய ஏஎஸ்ஐ பிரகாஷ் மீது புகார் அளித்தார். அப்போது விஷ்ணுவுக்கும், பிரகாஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் விஷ்ணு தன்னை தலையில் தாக்கிவிட்டதாக பிரகாஷ் புகார் அளித்தார். இதையடுத்து, விஷ்ணு அவரின் சகோதரர் விக்னேஷ் இருவரும் கைது செய்யப்பட்டு, பல மணிநேரம் கொடூரமாக போலீஸாரால் போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டு டார்ச்சர் செய்யப்பட்டனர்.
போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், சிறையில் இருந்தவர்களை விடுவிக்க முயற்சித்தல், போலீஸாரை தாக்கியது என ஐபிசி 353 பிரிவில் இருவர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து 12 நாட்கள் சிறையில் அடைத்தனர்.
முதலில் இருவரும் சிறையில் ஏற்பட்ட காயம், கொடுமை குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. போலீஸார் மீதிருக்கும் குற்றத்தை நிரூபிக்க தேவையான ஆவணங்களையும், ஆதாரங்களையும் விஷ்ணு, விக்னேஷ் இருவரும் திரட்டினார்கள். அதந்பின் கேரள போலீஸ் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இருவரும் ஆதாரத்துடன் புகார் அளித்தனர்.
ரூபாய் வீழ்ச்சியைத் தடுக்க ரகுராம் ராஜனை அழைத்துப் பேசுங்கள்: பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் ஆலோசனை
சிறையில் இருந்து வெளியானபின் இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட காயத்தை மற்றவர்களிடம் காண்பித்து தங்களுக்கு சிறையில் என்ன நடந்தது என்பதைத் தெரிவித்தனர்.
காவல் உயர் அதிகாரிகளிடம் விக்னேஷ் அளித்த புகாரில் “ போலீஸார் எங்களை போலி வழக்கில் கைது செய்து அடித்து, சித்ரவதை செய்தனர். எங்களை மிரட்டி வீட்டில் போதை மருந்தை வைத்து, குடும்பத்தினரையும் கைது செய்வோம் என அச்சுறுத்தினார்கள். சிறையில் என்னை போலீஸார் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, என் ஆள்காட்டி விரலை உடைத்துவிட்டனர். இனிமேல் போலீஸ் வேலையில் துப்பாக்கியை எவ்வாறுசுட முடியும்.
துணை ஆய்வாளர் அனீஷ் என் தலையை குணியவைத்து, என் பின்முதுகில் தாக்கினார். அதுமட்டுமல்லாமல் குடிக்க தண்ணீர் கேட்டபோது, சிறுநீரைக்கொடுத்து கொடுமைப்படுத்தினர்” எனத் தெரிவித்தார்
தொடக்கத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகிய 4 காவல்அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர் அதிலும் தங்கள் வீடுகளுக்கு அருகே இருக்கும் காவல்நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக கொல்லம் நகர போலீஸ் ஆணையர் மெரின் ஜோஸப் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், முதல்கட்ட விசாரணையில், போலீஸ்அதிகாரிகள் 4 பேரும் ஏராளமான தவறுகளைச் செய்திருப்பதும், விஷ்ணு, விக்னேஷை டார்ச்சர் செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 4 அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கிள்ளிகொல்லூர் காவல்நிலையத்தில் உள்ள மேலும், 5 போலீஸாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். கொல்லம் நகர போலீஸ் ஆணையர் மெரின் ஜோஸப் தனது விசாரணை அறிக்கையை காவல் டிஜிபியிடம் இன்று வழங்குவார் எனத் தெரிகிறது
இந்த கொடூரமான சம்பவத்தால் விஷ்ணுவின் திருமணம் தள்ளிப்போனது, விக்னேஷுக்கு கிடைக்க வேண்டிய போலீஸ் வேலை கிடைக்கவில்லை.
கையால் நெய்யப்பட்ட பிரதமர் மோடி அணிந்த ஆடையின் சிறப்பு இதுதான்!!
போலீஸ் டார்ச்சர் விவகாரம் கேரள அரசியலில்பெரும் புயலைக் களப்பியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக ஆளும் கட்சியை விமர்சித்துள்ளது. காங்கிரஸ் மாநில தலைவர் சுதாராகரன், கேரள போலீஸ்நிலையங்களை, கொடுமைப்படுத்தும் மையங்களுக்கு இணையாக ஒப்பிட்டார். போலீஸ் அடக்குமுறை, அட்டூழியம் அதிகரித்துவருவதாகவும், ஆங்கிலேயர் ஆட்சியைவிட மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தார்
எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில் “ போலீஸ் உயர் அதிகாரிகள் கட்டளைப்படி போலீஸார் நடக்காமல் மார்க்சிஸ்ட் தலைவர்கள் உத்தரவுப்படி நடக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்
ஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து, மாநில மனித உரிமைகள் ஆணையம், வழக்குப்பதிவு செய்து கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரித்து 15 நாட்களில் அறிக்கைதர உத்தரவிட்டுள்ளது
- Kilikolloor
- MDMA
- Vignesh
- Vishnu
- custodial torture
- dugs case
- kerala
- kerala breaking news
- kerala cistodial torture
- kerala film news
- kerala jawan tortured by police
- kerala live news
- kerala news
- kerala news live
- kerala police
- kerala police torture exposed
- kerala political news
- kerala political news videos
- latest kerala news
- police station
- police torture
- suspension
- transfer
- national news
- india news