இப்படியொரு காரியத்தை எந்த முதல்வரும் செய்திருக்க மாட்டார்கள் என உடனடி நடவடிக்கை எடுத்து சில மணி நேரங்களிலேயே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 17 பேரை கைது செய்த உ.பி., முதல்வர் யோகி ஆதித்யாநாத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

உத்தரப்பிரதேசம், மொரதாபாத் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் குடும்பத்தினரை வேறு இடத்தில் தனிமைப்படுத்த, ஆம்புலன்சில் மருத்துவ பணியாளர்கள் ஏற்றிய போது, அப்பகுதி மக்கள் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களுடன் சென்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் மருத்துவ பணியாளர்கள் படுகாயம் அடைந்தனர். பிற்பகலில் இந்த சம்பவம் நடைபெற்றது. உடனடியாக 25 பேர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர். உடனடியாக 3 மணிக்கு அவர்கள் ரிமாண்ட் செய்யப்படுவதற்காக நீதிபதி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மாலை 5.15 மணிக்கு 7 பெண்கள் உட்பட 17 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் தள்ளினர். சம்பவம் நடந்த 4 மணி நேரத்துக்குள் வேகமாக செயல்பட்டு இப்படியொரு நடவடிக்கையை எந்த முதல்வரும் இதுவரை செய்திருக்க வாய்ப்பில்லை. யாரும் செய்யவும் விரும்புவதில்லை. ஆனால் அப்படியொடு விறுவிறுப்பான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யா நாத்தின் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.