Asianet News TamilAsianet News Tamil

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத தேசமாக மாறுகிறதா இந்தியா? - நாள்தோறும் 106 பலாத்காரங்கள்

Is India becoming an unprotected nation
Is India becoming an unprotected nation
Author
First Published Dec 2, 2017, 3:39 PM IST


கடுமையான சட்டங்கள், நீதிமன்றங்களின் வலுவான தீர்ப்புகள்  இருந்போதிலும், ஆண்டுக்கு ஆண்டுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

 

தேசிய குற்ற ஆவண காப்பகம்(என்.சி.ஆர்.பி.) வெளியிட்ட புள்ளிவிவரங்களில், நாடுமுழுவதும் கடந்த 2015ம் ஆண்டில் 34 ஆயிரத்து 210 பலாத்கார வழக்குகள் பதிவான நிலையில், 2016ம் ஆண்டில் அது 2.9 சதவீதம் உயர்ந்து, 38 ஆயிரத்து 947 வழக்குகள் பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேசிய குற்ற ஆவணக்காப்பகம் கடந்த வியாழக்கிழமை நாட்டின் குற்ற நிலவரங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில் பெண்களுக்கு எதிராக கடந்த ஆண்டு 3 லட்சத்து 38 ஆயிரத்து 954 குற்றங்கள் நடந்துள்ளன எனத் தெரியவந்துள்ளது.

 

கடந்த 2016ம்ஆண்டில் மட்டும் சராசரியாக நாள்தோறும் 106 பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ள என்று தெரியவந்துள்ளது. பெண்களை பாதுகாக்கும் சட்டங்களை மேலும் கடுமையாக்கவேண்டும் என்ற அபாய ஒலியை எழுப்பி இருக்கிறது.

 

கடந்த 2016ம் ஆண்டில் 36ஆயிரத்து 859 பலாத்கார வழக்குகளில் 2 ஆயிரத்து 116 பலாத்கார வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பது வேதனைக்குரியதாகும். இந்த குற்றங்களில் ஈடுபட்டதில் பெரும்பாலும் அண்டை வீட்டார்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், கணவர், உடன் பணியாற்றுபவர்கள், அலுவலக ஊழியர்கள் எனத் தெரியவந்துள்ளது.

 

தலைநகர் டெல்லி ஒவ்வொரு ஆண்டிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரில் முன்னணியில் இருந்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டில் அதிகபட்சமாக 1,996 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து மும்பை நகரில் 712 பலாத்கார வழக்குகளும், புனேயில் 354 வழக்குகளும், ஜெய்பூரில் 330 வழக்குகளும் பதிவாகியுள்ளன என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

 

2016ம் ஆண்டில் பெண்களை கூட்டு பலாத்காரம் செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. 2015ம்ஆண்டு 2ஆயிரத்து 113 சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், கடந்த ஆண்டில் 2 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில் கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக 49 ஆயிரத்து 262 குற்றங்கள் நடந்துள்ளன. நாட்டில் மொத்தம் 3 லட்சத்து 38 ஆயிரத்து 954 குற்றங்களில்  14 சதவீதம் உத்தரப்பிரதேசத்திலும், அதைத் தொடர்ந்து 9 சதவீதம் மேற்கு வங்காளத்திலும் நடந்துள்ளன.

 

கணவர் அல்லது உறவினர் மூலம் பாதிக்கப்பட்டு அது தொடர்பான வழக்குகள் 32 சதவீதமும், பலாத்காரம் செய்யும் நோக்குடன் பெண்களுக்கு எதிரான தாக்குதல் வழக்குகள் 25 சதவீதமும், கடத்தல் வழக்குகள் 19 சதவீதமும், கற்பழிப்புகள் 11.5சதவீதம் அடங்கும்.

 

கட்டாயத் திருமணத்துக்கா பெண்கள் அல்லதுசிறுமிகள் என 33 ஆயிரத்து 796 பேர் கடந்த ஆண்டு கடத்தப்பட்டுள்ளனர். இதில் 12 ஆயிரத்து 70 வழக்குகள் உத்தரப்பிரதேசமாநிலத்தில் நடந்தவையாகும்.

 

பெண்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த 3 லட்சத்து 38 ஆயிரத்து 954 குற்றங்களில் 2 லட்சத்து 60ஆயிரத்து 304 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இதில் 23 ஆயிரத்து 94 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மீது ஆசிட் வீசியதாக கடந்த 206 வழக்குகள்பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios