முன்பின் தெரியாத நபருக்கு டிக்கெட் புக் பண்ணப் போறீங்களா? முதலில் IRCTC விதிமுறையைத் தெரிஞ்சுக்கோங்க!

அறிமுகமில்லாத நபர்களுக்கு டிக்கெட் புக் செய்து கொடுத்தால் சிறை தண்டனை கிடைக்கும் அல்லது ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுவது தவறானது என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

IRCTC wants you to remember these 3 important things while booking tickets; and believe no other 'viral news' sgb

பொதுமக்கள் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவிவரும் தவறான செய்திக்கு இந்திய ரயில்வே மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

அறிமுகமில்லாத நபர்களுக்கு டிக்கெட் புக் செய்து கொடுத்தால் சிறை தண்டனை கிடைக்கும் அல்லது ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுவது தவறானது என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என ஐஆர்சிடிசி கட்டுப்பாடு விதித்த்துள்ளது என்றும் தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று என சமூக ஊடகங்களில் வதந்தி பரவுகிறது.

ஆந்திராவில் அல்ட்ராடெக் சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 20 தொழிலாளிகள் படுகாயம்

இதற்கு விளக்கம் அளித்துள்ள ரயில்வே, முன்பின் தெரியாதவர்களுக்கு இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் புழக்கத்தில் உள்ள செய்தி தவறானது என்று தெரிவித்துள்ளது.

மேலும், மக்கள் தங்கள் பயனர் ஐடிகளில் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் ஐஆர்சிடிசி கூறியுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறைகள்:

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொதுமக்கள் நினைவில் கொள்ளவேண்டிய மூன்று முக்கிய விதிமுறைகள் என்னென்ன என்றும் விளக்கம் அளித்துள்ளது.

1. ஐஆர்சிடி இணையதளம் அல்லது செயலியை பயன்படுத்தி ஒரு தனிநபர் பயனர் ஐடியில் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

2. ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யலாம். ஆதார் எண்ணை இணைத்த பயனர்கள் ஒரு மாதத்திற்கு 24 டிக்கெட்டுகள் வரை புக் செய்யலாம்.

3. தனிநபர் பயனர் ஐடிகளில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் வணிக ரீதியான விற்பனைக்கானவை அல்ல. இதனை மீறுவது ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 143 இன் கீழ் குற்றமாகும்.

யார் இந்த பொற்கொடி? 20 வயது மூத்தவரை விரும்பி திருமணம் செய்துகொண்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios