ஆந்திராவில் அல்ட்ராடெக் சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 20 தொழிலாளிகள் படுகாயம்
ஆந்திராவில் அல்ட்ராடெக் சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் ஒன்று திடீரென்று வெடித்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் 20 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் அவர்களில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டத்தில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 20 தொழிலாளிகள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் 10 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர்.
ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டத்தில் உள்ள ஜக்கையா பேட்டையில் பிரபல சிமெண்ட் தொழில உற்பத்தி நிறுவனமான அல்ட்ராடெக் நிறுவனத்திற்கு சொந்தமான சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. அந்த தொழிற்சாலையில் இன்றும் வழக்கம் போல் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது தொழிற்சாலையில் உள்ள பாய்லர் ஒன்று திடீரென்று வெடித்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் 20 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் அவர்களில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார்,மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் காயமடைந்த இருபது பேரையும் மீட்டு விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 பேரில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்து காரணமாக தொழிற்சாலையில் தற்போது உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் என்ற என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ப்ரீ ஹீட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வாசம்ஷெட்டி சுபாஷ் கூறியுள்ளார்.
நிறுவனம் ப்ரீ-ஹீட்டரை கவனமாக பராமரிக்கத் தவறிவிட்டது என்று கூறிய அமைச்சர் சுபாஷ், இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். பாய்லர் வெடிப்பு குறித்து அறிக்கை அளிக்கவும் அமைச்சர் சுபாஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
எப்போதும் டீ குடிச்சுட்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா? அப்ப இதைத் தெரிஞ்சுகோங்க!