IRCTC இணையதளம் முடங்கியதா..? தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் அவதி
இன்று காலை இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ரயில்களை இயக்கி வருகிறது. டிக்கெட் கட்டணம் குறைவு, வசதியான பயணம், விரைவான பயணம் போன்ற காரணங்கள் பலரும் ரயில் பயணங்களையே தேர்வு செய்கின்றனர். இதனால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ரயில் பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயணங்களை திட்டமிட்டு அதற்கேற்றவாறு டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். மேலும் திடீர் பயணத்திற்கு தட்கல் முறையில் முன்பதிவு செய்யும் முறையை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ரயில் நிலையங்களில் நேரடியாக முன் பதிவு செய்து கொள்ள முடியும் என்றாலும், தற்போது பெரும்பாலான பயணிகள் ஆன்லைனிலேயே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க : கைதுக்குப் பின் முதல் நாள் இரவில் விரக்தியுடன் இம்ரான் கான்; வெளியான முதல் புகைப்படம்!!
அந்த வகையில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான IRCTC இணையதளம் மற்றும் செயலி மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ள முடியும். இந்த நிலையில் IRCTC இணையதளம் முடங்கியதாக ரயில் பயணிகள் பலரும் சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் IRCTC இணையதளம் மற்றும் செயலியில் லாகின் செய்ய முடியவில்லை என்றும் பலரும் இந்திய ரயில்வே நிர்வாகத்தை ட்விட்டரில் டேக் செய்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
பராமரிப்பு காரணமாக ஆன்லைன் டிக்கெட் சேவை தற்போது கிடைக்காது எனவும், சிறிது நேரத்திற்கு பிறகு முயற்சிக்கவும் என்றும் இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தது. எனினும் தற்போது IRCTC இணையதளம் சீராகிவிட்டது.
இதையும் படிங்க : மாமியாரை வாணலியை வைத்து அடித்து கொன்ற மருமகள்.. பதற வைக்கும் கொலை சம்பவம்..