நாடு முழுவதும் இண்டிகோ விமான ரத்து மற்றும் தாமதங்களால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதற்குப் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார் இண்டிகோ சிஐஓ பீட்டர் எல்பர்ஸ்.
நாடு முழுவதும் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான விமான ரத்துகளும் தாமதங்களும் பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் ஒரு வாரத்திற்குப் பிறகு தனது செயல்பாடுகளின் நிலையை மீட்டெடுத்து வருகிறது. புதிய தகவல், சிஐஓ பீட்டர் எல்பர்ஸ், “நாங்கள் உங்களை ஏமாற்றிவிட்டோம்” என மனம் நேரடியாக திறந்து பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இண்டிகோ நிறுவனம் விளக்கம்
செயல்பாட்டு தடங்கல்கள் காரணமாக ஏற்பட்ட குழப்பம் என்று எல்பர்ஸ் கூறுகிறார். இண்டிகோ சந்தித்த பெரிய செயல்பாட்டு இடையூறு பயணிகளை சிக்க வைத்தது. "விமானப் பயணம் மக்களையும் அவர்களின் லட்சியங்களையும் இணைக்கும் ஒன்று. அதைத் தடை செய்தது எங்களை வருத்துகிறது" என்று கூறினார்.
ரத்து செய்யப்பட்ட விமானங்கள்
ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பணத்தை “எந்த விசாரணையும் இல்லாமல்” உடனடியாக வழங்கத் தொடங்கியுள்ளது இண்டிகோ தெரிவித்தார். பல பயணிகள் ஏற்கனவே தங்களது திருப்பித் தொகையைப் பெற்றுவிட்டனர்; தினசரி அடிப்படையில் பணம் வழங்கப்படுகிறது.
சுமார் 780 பயணிகளின் உடமைகள் இன்னும் திருப்பித் தரப்படவில்லை. இதில் 90% இன்று (புதன்கிழமை) காலைக்குள் வழங்கப்படும் என நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது. இவை அனைத்தும் அரசின் கடுமையான கண்காணிப்பில் நடைபெறுகின்றன.
மும்பை விமான நிலையத்தில் ஆய்வு
மும்பை சிஎஸ்எம்ஐஏ விமான நிலையம் ஏற்கனவே திறன் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், விமானம் ரத்து மேலும் அழுத்தம் சேர்த்துள்ளன. இதனால், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் மதுசூதன சங்கர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, இண்டிகோ ஊழியர்களிடம் விளக்கங்கள் கேட்டார்.
பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் கட்டாயம்
நீண்ட வரிசைகள், தாமதங்கள் அதிகரித்ததால், உணவு, குடிநீர், இருக்கை வசதி, மருத்துவ உதவி, PRM உதவி போன்றவை அடிப்படை சேவைகளை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு வழிகாட்டும் பணியில் CISF-ன் பங்களிப்பையும் அமைச்சகம் பாராட்டியது.
கொல்கத்தாவிலும் அதே நிலை?
மும்பையைத் தொடர்ந்து, கொல்கத்தா விமான நிலையத்திலும் செயல்பாட்டு நெருக்கடிகள் குறித்து MoCA குழு ஆய்வு செய்தது. வரிசை மேலாண்மை, பைக் கையாளுதல் முதல் ரத்து அறிவிப்பு வரை அனைத்து பிரிவுகளையும் புள்ளிவிவரங்களுடன் மதிப்பீடு செய்தனர்.
இயல்புநிலைக்கு திரும்பும் இண்டிகோ
அரசின் தலையீடும், விமான நிலையங்களின் கூடுதல் ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன, இண்டிகோ முழுமையாக மீண்டும் வர எவ்வளவு நாட்கள் ஆகும் என்பது இன்னும் தெளிவில்லை. வரும் நாட்களில் நெருக்கடி குறையுமா அல்லது மோசமடையுமா என்ற கவலை தொடர்ந்து நிலவி வருகிறது.
மன்னிப்பு கேட்ட இண்டிகோ சிஐஓ
இண்டிகோ விமான ரத்து மற்றும் தாமதங்கள் நாட்டின் விமான நிலையங்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் சிஐஓ பீட்டர் எல்பர்ஸ் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார்.
பெருமளவு செயல்பாட்டு சிக்கல்களால் பயணிகள் சிரமப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டார். நிலைமை மீண்டும் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப அரசு, விமான நிலைய நிர்வாகம் மற்றும் இண்டிகோ கூட்டாக பணிபுரிகின்றன.


