நடுக்கடலில் துல்லியமாக இலக்கை தகர்த்த பிரமோஸ் ஏவுகணை! இந்தியக் கடற்படையின் புதிய சாதனை!
போர்க்கப்பலில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் சோதனை இது என்று இந்திய கடற்படை கூறியுள்ளது.
இந்தியா கடற்படையின் முதல் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கபட்ட ஐஎன்எஸ் இம்பால் போரக்கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணையைச் செலுத்திச் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனையில் பிரமோஸ் ஏவுகணை தனது இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழித்து சாதனை படைத்துள்ளது.
போர்க்கப்பலில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் சோதனை இது என்று இந்திய கடற்படை கூறியுள்ளது. இந்த சோதனையில் கிடைத்துள்ள வெற்றி கடற்படையின் தயார்நிலையைக் காட்டுவதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் 5 லட்சம் மாடுகளை விற்று ரூ.500 கோடி சம்பாதித்த ஐ.ஐ.டி. மாணவிகள்!
இந்திய கடற்படையின் ஐஎன்ஸ் இம்பால் ஏவுகணைகளைத் அழிக்கும் திறன் கொண்ட மூன்றாவது போர்க்கப்பல் ஆகும். போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகம் (WDB) மற்றும் மும்பையில் உள்ள மாஸ்கான் டாக் (Mazagon Dock) நிறுவனங்கள் இணைந்து இந்தக் கப்பலை உருவாக்கியுள்ளன.
இரண்டாம் உலகப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்கள் நினைவாக இந்தப் போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் இம்பால் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 7,400 டன் எடை கொண்ட இந்தக் கப்பல் 164 மீட்டர் நீளம் உடையது. இது அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட போர்க்கப்பல் ஆகும். மணிக்கு 30 கடல் மைல் (மணிக்கு 56 கிமீ) வேகத்தில் செல்லும் திறன் படைத்தது.
ஐஎன்எஸ் இம்பால் போர்க்கப்பல் இந்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி முதல் முறையாக தனது சோதனைப் பயணத்தைத் தொடங்கியது. 6 மாத காலத்தில் பல்வேறு சோதனைகளுக்குப் பின் இந்தக் கப்பல் கடற்படைக்கு அர்ப்பணிக்கப்படும்.
வேற லெவல் ஆடியோ அனுபவம் கொடுக்கும் ஒன்பிளஸ் இயர்பட்ஸ்! ரிலீஸ் தேதி எப்போது?