- Home
- டெக்னாலஜி
- சாதனங்கள்
- வேற லெவல் ஆடியோ அனுபவம் கொடுக்கும் ஒன்பிளஸ் இயர்பட்ஸ்! ரிலீஸ் தேதி எப்போது?
வேற லெவல் ஆடியோ அனுபவம் கொடுக்கும் ஒன்பிளஸ் இயர்பட்ஸ்! ரிலீஸ் தேதி எப்போது?
ஒன்பிளஸ் நிறுவனதிதன் அடுத்த தலைமுறை இயர்பஸ் விரைவில் வெளியாக உள்ளது. வரும் டிசம்பர் 4ஆம் தேதி ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன்களுடன் OnePlus Buds 3 அறிமுகமாக உள்ளது.

OnePlus Buds 3
ஒன்பிளஸ் (OnePlus) இயர்போன் OnePlus 12 ஸ்மார்ட்போனுடன் சேர்த்து விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி சீனாவில் நடக்கும் விழாவில் இரண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
OnePlus Buds 3
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ரிலீஸ் நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே ஒன்பிளஸ் தயாராகியுள்ளது. நிறுவனத்தின் 10வது ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி இந்த நிகழ்வு நடக்க உள்ளது.
OnePlus Buds 3
இந்நிலையில் OnePlus Buds 3 இன் சான்றிதழ் FCC இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த இயர்பட்ஸ் E509A என்ற மாடல் எண் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. BIS இணையதளத்திலும் இதைபற்றிய தகவல் காணப்படுகிறது.
OnePlus Buds 3
OnePlus Buds 3 இயர்பட்ஸ் குறித்த தகவல்கள் செப்டம்பரில் இருந்தே ஆன்லைனில் கசியத் தொடங்கின. வடிவமைப்பைப் பொறுத்தவரை OnePlus Buds 3 முந்தைய OnePlus Buds Pro 2 போன்ற வடிவமைப்பையே கொண்டிருக்கும்.
OnePlus Buds 3
இயர்பட்ஸ் ஒவ்வொன்றும் 4.77 கிராம் எடையுள்ளதாக இருக்கும். 4.5W உள்ளீடு மற்றும் 1.2W வெளியீடு சக்தி கொண்ட 520mAh பேட்டரியைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு இயர்பட்டும் 58mAh பேட்டரியை பயன்படுத்தும். ANS மோட் இன் செய்யாதபோது 9 மணிநேர பேட்டரி லைஃப் கிடைக்கும். ANC மோட் ஆன் செய்திருந்தால் 6 மணிநேரம் பேட்டரி லைஃப் கிடைக்கும்.