பென்டகனை மிஞ்சிய குஜராத் கட்டிடம்! உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனைவிட மிகப்பெரிய கட்டிடத்தை பிரதமர் மோடி குஜராத்தின் சூரத் நகரில் திறந்து வைக்க இருக்கிறார்.
80 ஆண்டுகளாக, அமெரிக்க ராணுவத்தின் தலைமை அலுவலகமான பென்டகன் உலகின் மிகப்பெரிய அலுவலகக் கட்டிடமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது குஜராத் மாநிலத்தின் சூரத்தில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு அந்தப் பெயர் கிடைத்துள்ளது. அந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் ஒரு வைர வர்த்தக மையம் வரவிருக்கிறது.
சூரத் நகரம் வைரம் மற்றும் ரத்தினங்கள் சார்ந்த தொழிலின் உலகளாவிய தலைநகரமாகத் திகழ்ந்து வருகிறது. இந்த நகரில்தான் உலகின் 90 சதவீத வைரங்கள் வெட்டப்பட்டுகின்றன. அங்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடம் வைரங்களை வெட்டி, பாலிஷ் செய்யும் நிபுணர்கள் மற்றும் வர்த்தகர்கள் சுமார் 65,000 பேர் பணிபுரியும் இடமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
NDA என்றால் புதிய இந்தியா, வளர்ச்சி, நம்பிக்கை: புது விளக்கம் கொடுத்த பிரதமர் மோடி
இந்த 15 மாடி கட்டிடம் 35 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. ஒன்பது செவ்வக கட்டமைப்புகளைக் கொண்டிருக்கிறது. அவை நடுவில் உள்ள நீண்ட கட்டிடம் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. பரந்து விரிந்த இந்த கட்டிடம் 71 லட்சம் சதுர அடிக்கு மேல் உள்புற பரப்பைக் கொண்டுள்ளது.
இந்த கட்டிடத்தைக் கட்டி முடிக்க நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளன. இதனை இந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி அதிகாரபூர்வமாக திறந்து வைக்கிறார். இந்தக் கட்டிடத்தின் வளாகம் 20 லட்சம் சதுர அடியில் பொழுதுபோக்கு மண்டலம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
சூரத் டயமண்ட் போர்ஸ் என்ற இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் சார்பில் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கம்பெனிகள் சட்டம், 2013 இன் பிரிவு 8 இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட இந்த நிறுவனம் குஜராத்தின் சூரத்தில் வைர வர்த்தக மையம் ஒன்றை நிறுவுவதற்பகாகவே உருவாக்கப்பட்டது.
இந்தக் கட்டிடத்தை இந்திய கட்டிடக்கலை நிறுவனமான Morphogenesis வடிவமைத்துள்ளது. "பென்டகனை மிஞ்சுவது கட்டுமானத் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை" என்று அந்நிறுவனடத்தைச் சேர்த்த ஒருரவ் கூறியிருக்கிறார். இந்த வர்த்தக மையத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும் கட்டுமானத்திற்கு முன்பே வைர நிறுவனங்களால் வாங்கப்பட்டுவிட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.
ராய்ப்பூர் சாலையில் இளைஞர்கள் நிர்வாணப் போராட்டம்! சமூக வலைத்தளங்களில் வெளியான ஷாக்கிங் வீடியோ!