அபிநந்தனிடம் பாகிஸ்தான் ராணுவம் மிரட்டி இந்திய விமானப்படை ரகசியங்களை திரட்டியதா? போன்ற விவரங்கள் தொடர்பாக விசாரணையை இந்திய ராணுவம் மேற்கொள்ள இருக்கிறது.

பாகிஸ்தானில் இருந்து விடுதலையான இந்திய விமானப்படையின் விங் காமாண்டர் அபிநந்தன் லாகூரில் இருந்து முக்கிய பிரமுகர்களை அழைத்து செல்லும் சாலை மார்க்கமாக வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார். வாகா எல்லையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே ஆரவாரத்துடன் கூடிய வரவேற்பை மக்கள் அளித்து வருகின்றனர்.

குடியுரிமை அபிநந்தன் அமிர்தசரஸ் நகருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவருடன் அவரது மனைவி, பெற்றோர்களும் விமானத்தில் செல்ல உள்ளனர். அங்கிருந்து டெல்லியில் ஒருவார காலம் விமான படை பாதுகாப்பில் தங்க வைக்கப்பட உள்ளார். அங்கு பாகிஸ்தானின் நடந்த சம்பவம் குறித்து அபிநந்தனிடம் விசாரனை நடைபெற இருக்கிறது.

 

எப்படி விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது? பாகிஸ்தான் ராணுவத்தினரின் பிடியில் சிக்கியது எப்படி? தரக்குறைவாக நடத்தினார்களா? ரத்த அழுத்தம் எப்படி இருக்கிறது? உடல்நலம் சீராக இருக்கிறதா? போன்ற விவரங்களை அறிய அபிநந்தனுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற இருக்கிறது. 

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் 3 நாட்கள் இருந்திருக்கிறார். ஆகையால் அங்கு அபிநந்தனிடம் பாகிஸ்தான் ராணுவம் மிரட்டி இந்திய விமானப்படை ரகசியங்களை திரட்டியதா? போன்ற விவரங்கள் தொடர்பாக விசாரணையை இந்திய ராணுவம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த விசாரணை ராணுவ நடைமுறைப்படியே நடத்தப்பட உள்ளது.