Asianet News TamilAsianet News Tamil

Indian Army helicopter crash: அருணாச்சலில் சீட்டா ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 வீரர்கள் உயிரிழப்பு!!

இந்திய ராணுவத்தின் சீட்டா ரக ஹெலிகாப்டர் அருணாச்சலப் பிரதேசத்தில் காலை 9.15 மணி அளவில் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்தது. 

Indian Army Cheetah helicopter crashes in Arunachal Pradesh's Bomdila; search parties launched
Author
First Published Mar 16, 2023, 2:19 PM IST

அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் உள்ள மண்டலா அருகே இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வியாழக்கிழமை காலை விபத்துக்குள்ளானது. போம்டிலாவுக்கு மேற்குப் பகுதியில் உள்ள மண்டலா அருகே விபத்து நடந்துள்ளது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த ஹெலிகாப்டர் இன்று காலை 9.15 மணி அளவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்தது.

விபத்துக்குள்னா ஹெலிகாப்டர் ராணுவத்தின் சீட்டா ரக விமானம்  ஆகும். இந்த ஹெலிகாப்டர் காலை 9 மணிக்கு மாவட்டத்தில் உள்ள சங்கே கிராமத்தில் இருந்து புறப்பட்டு அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள மிஸ்ஸமாரி நோக்கி சென்றுகொண்டிருந்தது.

லெப்டினன்ட் கர்னல் மற்றும் மேஜர் நிலைகளில் உள்ள இருவர் ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்த விபத்து நடைபெற்றதற்கான காரணம் என்ன என்பது தெரிய வரவில்லை. விமானத்தில் பயணித்த இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Deeply anguished to learn about the Army Aviation Cheetah Helicopter accident in Mandala, near Dirang in Arunachal Pradesh today.

My deepest condolences to the families of Lt. Col. VVB Reddy & Maj. Jayant A whom we lost in this crash. pic.twitter.com/3n7Ypdnbed

டெல்லி மதுமானக் கொள்ளை ஊழல்: அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பி விசாரணையைப் புறக்கணித்த கவிதா!

சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி ரோஹித் ராஜ்பிர் சிங் இந்த விபத்து பற்றிக் கூறுகையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கீழே விழுந்து எரிந்துகொண்டிருப்பதை கிராம மக்கள் கண்டுபிடித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறார். "திராங்கில் உள்ள பங்ஜலேப்பைச் சேர்ந்த கிராமவாசிகள் மதியம் 12.30 மணி அளவில் ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்தனர்" என்று தெரிவிக்கிறார்.

இப்பகுதியில் மொபைல் நெட்வொர்க் இல்லை. வானிலை மிகவும் பனிமூட்டமாக உள்ளதால் ஐந்து மீட்டர் வரையான தொலைவையே பார்க்க முடிகிறது. இதனால் தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டது என்று கூறப்பட்டு இருந்தது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் உள்ள சிங்கிங் கிராமம் அருகே ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. டுட்டிங் விமானப்படை தலைமையகத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில்  நடந்த இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த விமானப்படை வீரர்கள் ஐந்து பேரும் உயிரிழந்தனர்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றி கூகுளில் தேடியவருக்கு மரண தண்டனை

Follow Us:
Download App:
  • android
  • ios