Asianet News TamilAsianet News Tamil

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றி கூகுளில் தேடியவருக்கு மரண தண்டனை

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றி கூகுளில் தேடிய அந்நாட்டு உளவுத்துறை உயர் அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Kim Jong Un executes state's own spy for Googling him
Author
First Published Mar 16, 2023, 11:32 AM IST

2011ஆம் ஆண்டில் வடகொரியா அதிபராக பதவிக்கு வந்த கிம் ஜாங் உன் நாட்டில் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சி செய்துவருகிறார். அவரது சர்வாதிகார ஆட்சியில் தன்னை எதிர்ப்பவர்களே இருக்கக் கூடாது என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார். தனக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மரண தண்டனை விதித்து வருகிறார்.

அந்நாட்டு மக்கள் வெளியுலக செய்திகள் எதையும் அறிந்துகொள்ள முடியாது. வட கொரியாவில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் வெளிநாடுகளுக்குத் எந்தத் தகவலும் தெரியாது. இந்தச் சூழலில் வடகொரிய மக்கள் வெளியுலக தொடர்பே இல்லாமல் அந்த நாட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

அந்நாட்டு மக்கள் இணையத்தை பயன்படுத்தவும் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் போன்ற தேடும் தளங்களை பயன்படுத்த முடியாது. அந்நாட்டு அரசே உருவாக்கி நிர்வகிக்கும் Kwangmyong என்ற இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த முடியும்.

H1-B விசாவில் பணிபுரியும் இந்திய ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Kim Jong Un executes state's own spy for Googling him

சில உயர்மட்ட அதிகாரிகள் மட்டும் இன்டர்நெட்டில் கூகுள் போன்ற தளங்களை பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு. மேலும் அவர்கள் இணையத்தை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதும் கண்காணிக்கப்படுங்கிறது.

இந்நிலையில், பியூரோ 10 என்று அழைக்கப்படும் வடகொரிய உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் இன்டர்நெட்டில் அதிபர் கிம் ஜாங் உன் பற்றி தேடி இருக்கிறார். கூகுள் இணையதளத்தில் கிம் ஜாங் உன் பற்றி விவரங்களை தேடிப் பார்த்து இருக்கிறார். இதுபற்றிய தகவல் கிம் ஜாங் உன்னிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே ஆத்திரம் அடைந்த கிம் அந்த உளவுத்துறை அதிகாரிக்கு தடாலடியாக மரண தண்டனை விதித்துவிட்டார்.

அந்த உளவுத்துறை அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. உளவுத்துறையில் உயர் மட்டத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கே உடனடியாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இந்தச் செய்தி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rishi Sunak: பிரதமரே இப்படி பண்ணலாமா? நாயை திரியவிட்ட ரிஷி சுனக்கை கண்டித்த போலீஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios