Asianet News TamilAsianet News Tamil

H1-B விசாவில் பணிபுரியும் இந்திய ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

H1-B விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் வேலை இழந்தால் வேறு வேலை தேடிக்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

US presidential advisory panel recommends to extend grace period for H1-B workers to 180 days
Author
First Published Mar 15, 2023, 7:56 PM IST

ஹெச்1 பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் வேலை இழக்க நேர்ந்தால், அவர்கள் வேறு வேலை தேடிக்கொள்ள 180 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா மற்றும் அமேசான், ட்விட்டர் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள நிலையில், பல ஊழியர்கள் தங்களுக்கும் அந்த நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். வேலை இழந்தவர்களில் பலர் ஹெச்1 பி விசா (H1-B) மூலம் அமெரி்க்காவில் பணியாற்றிவர்கள்.

வேலை இழந்த அனைவரும் 60 நாட்களுக்குள் வேறு வேலையில் சேரவேண்டும். தவறினால் அவர்கள் அமெரிக்காவில் இருக்க முடியாது. சொந்த நாட்டுக்கே திரும்பவேண்டிய கட்டயாம் ஏற்படும். ஹெச்1 பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களில் இந்தியர்கள் அதிகம் உள்ளதால் பணிநீக்கத்தால் அதிக பாதிப்பைச் சந்தித்தவர்கள் இந்தியர்கள்தான்.

Rishi Sunak: பிரதமரே இப்படி பண்ணலாமா? நாயை திரியவிட்ட ரிஷி சுனக்கை கண்டித்த போலீஸ்

US presidential advisory panel recommends to extend grace period for H1-B workers to 180 days

எனவே அமெரிக்காவில் வேலை இழந்த வெளிநாட்டு ஊழியர்கள் வேறு வேலை தேடிக்கொள்ள அளிக்கப்படும் கால அவகாசம் 60 நாட்களுக்குப் பதிலாக 180 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அமெரிக்க அதிபரின் ஆலோசனைக் குழுவும் இதையே அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்புக்குப் பரிந்துரை செய்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் முக்கிய பதவிகளில் பணியாற்ற திறன் வாய்ந்த வல்லுநர்கள் தேவைப்பட்டால் அவர்களை வெளிநாட்டிலிருந்து தேர்வு செய்து பணியில் அமர்ந்த முடியும். அவ்வாறு பணியமர்த்தப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் தங்கி வேலை பார்ப்பதற்கு அனுமதி வழங்கும் வகையில்தான் ஹெச்1 பி விசா வழங்கப்படுகிறது. இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இந்த விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றுகிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு (USCIS) விரைவில் ஹெச்1 பி விசா தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. வேலை இழந்தவர்களுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டால் அதன் மூலம் சுமார் 10 ஆயிரத்துக்கு மேலான இந்திய மற்றும் சீன ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.

அண்டார்டிகாவில் உடைந்து மிதக்கும் ராட்சத பனிப்பாறை! லண்டன் நகரைவிட பெருசு!

Follow Us:
Download App:
  • android
  • ios