Asianet News TamilAsianet News Tamil

டெல்லி மதுமானக் கொள்ளை ஊழல்: அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பி விசாரணையைப் புறக்கணித்த கவிதா!

தெலுங்கானா சட்டமன்ற மேலவை உறுப்பினர் கவிதா உடல்நலக்குறைவை காரணம் காட்டி இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

KCR Daughter Kavitha Skips Enforcement Directorate Date, Sends Documents Instead
Author
First Published Mar 16, 2023, 12:35 PM IST

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதா அமலாக்கத்துறையின் அழைப்பைப் புறக்கணித்துள்ளார்.

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே ஊழல் வழக்கில் தெலுங்கானா முதல்வரும் பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு மார்ச் 9ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கவிதா, விசாரணையை தன் வீட்டிலேயே வைத்து நடத்துமாறு கோரினார். பெண்களிடம் விசாரிப்பதாக இருந்தால் அவர்களை வரவழைக்காமல் வீட்டிலேயே விசாரணை நடத்த சட்டத்தில் இடம் உள்ளது எனவும் சுட்டிக்காட்டி இருந்தார்.

KCR Daughter Kavitha Skips Enforcement Directorate Date, Sends Documents Instead

அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த அமலாக்கத்துறை டெல்லியில் உள்ள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியது. அதற்கு ஒப்புக்கொண்ட கவிதை, மார்ச் 16ஆம் தேதி நேரில் ஆஜராவதாகக் கூறினார். ஆனால் மீண்டும் கவிதாவின் கோரிக்கையை அமலாக்கத்துறை ஏற்க மறுத்துவிட்டது.

பின்னர் கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) கவிதா டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 9 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பின் பேசிய கவிதா, சில மாதங்களில் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது தந்தையும் ராஷ்டிர சமிதி முதல்வருமான சந்திரசேகர ராவை மிரட்ட முயற்சிப்பதாக கவிதா குற்றம் சாட்டினார்.

ஆனால், அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடந்த மார்ச் 16ஆம் தேதி மீண்டும் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், கவிதா தனது உடல்நிலையைக் காரணம் காட்டி இன்று நேரில் ஆஜராக முடியாது என்று அமலாக்கத்துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

2 ஆண்டு இழுபறிக்குப் பின் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி தேர்வு

Follow Us:
Download App:
  • android
  • ios