Indian Air Force Day 2022 : இந்திய விமானப்படையின் தரமான சம்பவங்கள்.. சுவாரஸ்ய தகவல்கள் இதோ..
நாட்டில் இன்று 90 வது இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் விமானப்படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி ஆங்கிலேயர்களால் ”ராயல் இந்திய விமானப்படை” எனும் பெயரில் நிறுவப்பட்டது. சுதந்திரத்திற்கு பின்பு, இதன் பெயர் ”இந்திய விமானப்படை” என்று மாற்றியமைக்கப்பட்டது.
இன்று சண்டிகாரில் 90வது இந்திய விமானப்படை தினக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. அதில் சுமார் 90 க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்று, வானில் பல்வேறு சாகசங்களை புரியவுள்ளன.
இன்றைய கொண்டாட்டத்தில் 44 போர் விமானங்கள், 7 பயண விமானங்கள், 20 ஹெலிகாபடர்கள், 7 விண்டேஜ் விமானங்கள் வானில் தங்களை பலத்தை காட்டவுள்ளன. மேலும் 9 விமானங்கள் தரையில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதில் புதிதாக விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ள இலகுரக போர் ஹெலிகாப்டர்களும் பங்கேற்கின்றன.
மேலும் படிக்க:இந்திய விமானப்படைக்கு புதிய சீருடை… எப்படி இருக்கும்? விவரம் உள்ளே!!
இந்நிலையில் நமது இந்திய விமானப்படை குறித்து சுவாரஸ்யமான சில தகவல்களை பார்க்கலாம்..
1, உலகில் 4 வது பெரிய விமானப்படை இந்திய விமானப்படை ஆகும்.
2, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே அமைந்துள்ள ஹிண்டன் விமானப்படை தளம் ஆசியாவிலே மிகப்பெரியது. இது 9000 அடி நீளம் மற்றும் 150 அடி அகல பரப்பளவு கொண்டது.
3, இந்திய விமானப்படையானது, ஜக்கிய நாடுகள் சபையுடன் சேர்ந்து அமைதி காக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
4, சுதந்திரத்திற்கு முன்பு வரை இந்திய விமானப்படை “ராயல் இந்திய விமானப்படை” என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
5. இந்திய விமானப்படை அதிகளவில் பெண் போர் விமானிகள் மற்றும் அதிகாரிகளைக் கொண்டுள்ளது. மேலும் ரஃபேல் போர் விமானத்திலும் போர் விமானியாக பெண் இருக்கிறார்.
மேலும் படிக்க:வெறும் 25 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்திய விமானப்படை .. உலகில் 4வது வலிமையான படையாக தலைநிமிர்ந்து நிற்கிறது.
6, இந்திய ராணுவத்தில் பல்வேறு போர் நடவடிக்கைகளில் விமானப்படை முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. உதாரணத்திற்கு இலங்கை - விடுதலை புலிகள் போரின் போது நடத்தப்பட்ட ”ஆப்ரேஷன் பூமாலை” , காஷ்மீர் சியாச்சின் பனிப்பாறை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட “ஆப்ரேஷன் மேக்தூத்”, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற ”கார்கில் போர்” ஆகியவற்றில் இந்திய விமானப்படையின் பங்கு மகத்தானது.
7, வெள்ளம், சுனாமி, புயல், பனிச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடரின் போது மீட்புப்பணிகளில் விமானப்படை ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க போர் விமானம் பயன்படுத்தப்பட்டது.
8, கடந்த 2015 ஆம் ஆண்டு சவூதி அரேபியா மேற்கொண்ட போரினால் யேமனில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை “மிஷன் ராகாத்” எனும் நடவடிக்கை மூலம் மீட்கும் பணியில் இந்திய விமானப்படை பங்கு முக்கியமானது.
மேலும் படிக்க:indian air force day:இந்திய விமானப்படையின் மைல்கல் ‘பிரசாந்த் ஹெலிகாப்டர்’: மேக் இன் இந்தியாவின் அம்சம்