வெறும் 25 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்திய விமானப்படை .. உலகில் 4வது வலிமையான படையாக தலைநிமிர்ந்து நிற்கிறது.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் முப்படைகளில் மிக முக்கியமான படை விமானப்படை தனது 90 வது ஆண்டு விழாவை நாளை கொண்டாட உள்ளது. இந்திய விமானப்படை உருவாக்கப்பட்ட அக்டோபர் 8 ஆம் தேதியே இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் 90 ஆவது இந்திய விமானப்படை தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் முப்படைகளில் மிக முக்கியமான படை விமானப்படை தனது 90 வது ஆண்டு விழாவை நாளை கொண்டாட உள்ளது. இந்திய விமானப்படை உருவாக்கப்பட்ட அக்டோபர் 8 ஆம் தேதியே இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் 90 ஆவது இந்திய விமானப்படை தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது.
பிரிட்டிஷ் ராயல் விமானப் படை:
பிரிட்டிஷார் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இந்தியா இருந்தபோது, இந்தியாவில் ராணுவத்தை உருவாக்கி அது தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. அந்த அடிப்படையில் 1932 அக்டோபர் 8ஆம் நாள் பிரிட்டிஷ் ராயல் விமானப் படையில் அங்கமாக இந்தியவிலும் விமானப்படை உருவாக்கப்பட்டது. வெறும் 25 வீரர்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படை இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்து சார்பில் நூற்றுக் கணக்கான வீரர்களுடன் நேச நாட்டுப் படைகளுக்கு ஆதரவாக பிரிட்டிஸ் சார்பில் பங்கேற்றது.
2ஆம் உலகப் போரில் இந்திய விமானப்படை :
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய படைகள் பர்மா வழியாக முன்னேறி வருவதை தடுக்கும் பணியில் இந்திய விமானப்படை ஈடுபடுத்தப்பட்டது. அதில் இந்திய விமானப்படை மிகச் சிறப்பாக பணியாற்றியதால் விமானப்படையை கவுரவிக்கும் வகையில் ராயல் இந்தியன் ஏர்போர்ஸ் என பிரிட்டிஷ் பெயர் சூட்டியது.
இதையும் படியுங்கள்: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான அமெரிக்கத் தூதரின் வருகையில் ஆட்சேபனை உள்ளது… மத்திய அரசு கருத்து!!
ஆனால் நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் அதுவரை ஆங்கிலேய அரசின் கீழ் செயல்பட்டு வந்த இந்திய விமானப்படை இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதன்பிறகு 1950 இல் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் பிரிட்டிஷ் சூட்டிய ராயல் என்ற வார்த்தை நீக்கப்பட்டதுடன், இந்திய விமானப்படை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
5 போர்களை சந்தித்த விமானப்படை
இந்திய விமானப்படை இந்தியாவில் கட்டுப்பாட்டிற்கு வந்தது முதல் இன்று வரை பாகிஸ்தானுக்கு எதிராக 4 போர்களை சந்தித்துள்ளது. சீனாவுடன் ஒரு போரை எதிர்கொண்டுள்ளது. இதுவரை புகழ்மிக்க ஆபரேஷன்களான விஜய் ஆபரேஷன், காக்டஸ் ஆபரேஷன், பூமாலை ஆபரேஷன், மேக்தூத் ஆபரேஷட் என முக்கிய வான்வெளி ஆபரேஷன்களை இந்திய விமானப்படை நிகழ்த்திக் காட்டியுள்ளது. உலகளவில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்திய விமானப்படை உலகின் நான்காவது மிகப் பெரிய விமானப்படை ஆக உள்ளது. இதில் போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் என பல பிரிவுகள் உள்ளன.
1400 க்கும் அதிகமான விமானங்கள் இந்திய விமானப்படையில் உள்ளன, ஒரு லட்சத்தி 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விமானப் படையில் பணியாற்றி வருகின்றனர். மிராஜ் 2000, மிக் 21, மிக் 27 , மிக் 29, சுகோய் 30, ஜாக்குவார், ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இடம் பெற்றுள்ளன. நாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் விமானத் தளங்கள் அமைந்துள்ளன. இந்தியாவுக்கு வெளியில் தஜிகிஸ்தானில் இந்திய விமானப் படைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிஉயரமான லடாக் மலை உச்சியில் இந்தியா விமானப்படைக்கு சிக்னல் அளிக்கும் உலகின் மிக உயரமான கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: : ரஷ்யாவை பின்னுக்கு தள்ளிய ISRO.. ஒரே நேரத்தில் 6 டன் எடை கொண்ட 36 செயற்கைகொள்களை ஏவ தயாராகும் GSLV MK111..
எதிரிகளை துவம்சம் செய்ய தயார் நிலையில் விமானப்படை:
எந்த நேரத்திலும் எதிரி நாடுகளின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் இந்திய போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விமானப்படை என்பது முழுக்க முழுக்க பாதுகாப்புக்கு மட்டுமேயன்றி பேரிடர் காலங்களில் மீட்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மேலும் லடாக் உள்ளிட்ட உயரமான பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுக்கு உணவு, உடை மற்றும் ராணுவத் தளவாடங்களை கொண்டு செல்லவும் விமானப்படை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது சுமார் 20 ஆயிரம் பேரை இந்திய விமானப்படை மீட்டு சாதனை படைத்தது. இத்தகைய அருமை பெருமை வலிமை கொண்ட இந்திய விமான படை நாளை 90 ஆவது ஆண்டு தினம் கொண்டாடுகிறது.இந்த பெருமைமிகு நாளில் நம் இந்திய விமானப்படைக்கு வணக்கம் செலுத்துவோம்.