Asianet News TamilAsianet News Tamil

ஓவராக சீன் போட்ட சீனாவுக்கு கடைசி நிமிடத்தில் ஆப்பு.. தரமான சம்பவம் செய்த இந்தியா..!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் முழுவதும் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில், பங்கு சந்தையில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மதிப்பும் வேகமாக சரிந்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றன. குறிப்பாக சீனாவின் மத்திய வங்கி கடந்த மார்ச் மாதத்திற்குள் இந்தியாவின் ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் 1.01 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது. 

India Revises FDI Policy
Author
Delhi, First Published Apr 19, 2020, 10:12 AM IST

கொரோனாவை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பெருநிறுவனங்களை விலைக்கு வாங்கும் சீனாவின் முயற்சியை முறியடிக்கும் விதமாக அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் முழுவதும் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில், பங்கு சந்தையில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மதிப்பும் வேகமாக சரிந்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றன. குறிப்பாக சீனாவின் மத்திய வங்கி கடந்த மார்ச் மாதத்திற்குள் இந்தியாவின் ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் 1.01 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது. 

India Revises FDI Policy

சீனாவின் இந்த நடவடிக்கையால் இந்திய பெரு நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  கொரோனாவை பயன்படுத்தி இந்திய நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சிப்பதாகவும் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

India Revises FDI Policy

இந்நிலையில், இந்திய நிறுவனங்களின் பங்குகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்யவேண்டும் என்றால் மத்திய அரசிடம் அனுமதி முக்கியம் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தியுள்ளது. சீனாவை குறிவைத்து அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறையின் படி இந்தியாவுடன் எல்லைகளை பகிர்ந்துள்ள நாடுகள் இந்திய நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

India Revises FDI Policy

அந்நிய முதலீட்டு நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திருத்தம் வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பாக சீனா இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து பங்குகளை வாங்கி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைத்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios