உறவுகளை பேணுவதில் இந்தியா முதலிடம்.. இந்த நாடுகளில் தான் விவாகரத்து வழக்குகள் அதிகம்..
இந்தியாவில் விவாகரத்து வழக்குகள் 1 சதவீதம் மட்டுமே உள்ளன
உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, குடும்ப அமைப்பு மற்றும் விழுமியங்களைப் பராமரிக்கும் நாடுகளில் இந்தியா உலகில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் விவாகரத்து வழக்குகள் 1 சதவீதம் மட்டுமே உள்ளன, அதே சமயம் 94 சதவீதம் வரை உறவுகளை முறித்துக் கொள்ளும் நாடுகள் பல உள்ளன என்பது சமீபத்திய புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
உலக புள்ளிவிவரங்களின் தரவுகளின்படி, ஆசிய நாடுகளில் விவாகரத்து வழக்குகள் குறைவாகவே உள்ளன, அதே சமயம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிக குடும்பங்கள் சிதைவடைகின்றன. இந்தியாவுக்கு அடுத்தபடியாக வியட்நாம் நாட்டில் 7 சதவீத திருமணங்கள் மட்டுமே விவாகரத்தில் முடிகிறது. இது தவிர, தஜிகிஸ்தானில் 10 சதவீத உறவுகளும், ஈரானில் 14 சதவீதமும், மெக்சிகோவில் 17 சதவீதமும் விவாகரத்து செய்கின்றனர்.
இதையும் படிங்க : RK Suresh: ஆருத்ரா மோசடி வழக்கு.. சிக்கிய ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கை முடக்கி சரியான ஆப்பு வைத்த போலீஸ்.!
எகிப்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில், துருக்கி மற்றும் கொலம்பியா ஆகிய 10 நாடுகளில் விவாகரத்து வழக்குகள் குறைவாக உள்ளன. ஜப்பானில் 35 சதவீத உறவுகளில் விவாகரத்து கூறப்பட்ட நிலையில், அண்டை நாடான பாகிஸ்தான் இந்த அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. இது தவிர, ஜெர்மனியில் 38 சதவீத திருமணங்களும், பிரிட்டனின் விவாகரத்து எண்ணிக்கை 41 சதவீதமாகவும் உள்ளது.
மறுபுறம், சீனாவில் 44 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. அமெரிக்காவில், இந்த எண்ணிக்கை 45 சதவீதமாக உள்ளது, அதே சமயம் டென்மார்க், தென் கொரியா மற்றும் இத்தாலியில், 46 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.
உறவுகளைப் பேணுவதில் மோசமான நாடுகள் ஐரோப்பாவில் உள்ளன. போர்ச்சுகல் நாட்டில், 94 சதவீத விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தவிர, 85 சதவீத விவாகரத்து வழக்குகளுடன் ஸ்பெயின் இரண்டாவது கடைசி இடத்தில் உள்ளது. இது தவிர, லக்சம்பர்க்கில் 79 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. இது மட்டுமின்றி, ரஷ்யாவில் 73 சதவீத விவாகரத்து வழக்குகள் அதிவு செய்யப்பட்டுள்ளன. ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனில் 70 சதவீத திருமணங்கள் உறவுகள் முறிந்தன.
மற்ற நாடுகளை விட இந்தியாவில் விவாகரத்து வழக்குகள் குறைவு : இந்தியாவில் கலாச்சார அம்சம் காரணமாக நீண்ட உறவுகள் இருக்கின்றன என்று சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய கலாச்சாரத்தில் குடும்ப அமைப்பைப் பராமரிப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது தவிர, அதிக எண்ணிக்கையிலான விவாகரத்து வழக்குகள் சட்டப்பூர்வ செயல்முறைக்கு செல்லவில்லை. மேலும் கணவனும் மனைவியும் தனித்தனியாக வாழத் தொடங்குகிறார்கள். இதனால், விவகாரத்து எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : சென்னை மெட்ரோவில் இனி சைக்கிள்களை எடுத்து செல்ல முடியாது.. என்ன காரணம்..?