இந்தியா வெளியிட உள்ள முக்கிய ஆதாரம்..! விரைவில் அடுத்த பரபரப்பு..! 

இந்தியா பாகிஸ்தான் இடையே புல்வாமா தாக்குதலை தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வந்தது. பாகிஸ்தான் ராணு வீரர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானியை நேற்று இந்தியாவிடம் ஒப்படைத்தனர்.

புல்வாமா தாக்குதலில் 44 இந்திய வீரர்கள் பலியானதை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலுக்கு தக்க பதிலடி கொடுக்க காத்திருந்தது. அதன் படி, கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதியன்று பாலாகோட் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை  வான்வழி தாக்குதல் நடத்தியது. அதில் 300 கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

அனால், அப்படி ஒரு தாக்குதல் நடந்ததற்கு என்ன ஆதாரம் உள்ளது என எதிர்க்கட்சிகள் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா கேள்வி எழுப்பினர்.இதற்கு பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்தியில், பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதாரங்கள் உள்ளது. அவற்றில் பயங்கரவாத முகாம் கட்டிடங்களை சுற்றி 150 முதல் 200 மீட்டர் தொலைவிற்கு குண்டுகள் வீசப்பட்டது.. செயற்கைகோள் படத்தில் தெளிவாக உள்ளது என கருத்து தெரிவித்து உள்ளது. 

அதுமட்டுமல்லாமல், இந்த புகைப்பட ஆதாரங்களை வெளியிட வேண்டுமா ? என்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், அதே நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட பாலாகோட் பகுதியில் சீரமைக்கும் பணியை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது என்ற தகவலையும் தெரிவித்து உள்ளது. இதன் மூலம் மிக விரைவில் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரத்தை இந்தியா வெளியிட வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.