Asianet News TamilAsianet News Tamil

750 கி.மீ. தூர இலக்கைத் தாக்கும் 2வது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கடற்படைக்கு அர்ப்பணிப்பு!

இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். அரிகாட் விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டது. 6,000 டன் எடை கொண்ட இந்தக் கப்பல் 750 கி.மீ. தூரம் வரை உள்ள இலக்கைத் தாக்கும் கே-15 ஏவுகணையைக் கொண்டிருக்கிறது.

India Gets Its Second Nuclear Submarine, INS Arighaat sgb
Author
First Published Aug 29, 2024, 11:28 PM IST | Last Updated Aug 30, 2024, 12:37 AM IST

இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிகாட் வியாழக்கிழமை இந்தியக் கடற்படையில் அர்ப்பணிக்கப்பட்டது.

தற்போது இந்திய கடற்படை 17 நீர்மூழ்கி கப்பல்களை வைத்திருக்கிறது. இவற்றில் 16 நீர்மூழ்கி கப்பல்கள் டீசல் மற்றும் மின்சாரத்தின் மூலம் இயங்குகின்றன. இவற்றில் ஆறு கப்பல்கள் ரஷ்யாவின் கிலோ வகையைச் சேர்ந்தவை. நான்கு கப்பல்கள் ஜெர்மனியின் எச்.டி.டபிள் ரகத்தைச் சேர்ந்தவை. இன்னொரு ஆறு கப்பல்கள் பிரான்சின் ஸ்கார் பீன் ரகத்தைச் சேர்ந்தவை.

அணுசக்தியில் இயங்கும் ஒரே நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். அரிஹந்த் 2018ஆம் ஆண்டு இந்தியக் கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 83 மெகாவாட் திறன் கொண்ட அணு உலையை உள்ளடக்கிய இந்தக் கப்பலில் இருந்து அணு ஏவுகணைகளை ஏவ முடியும்.

அம்பானியை அசால்டாக வீழ்த்திய அதானி! இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம்!!

அதேபோன்ற இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். அரிகாட் விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டது. 6,000 டன் எடை கொண்ட இந்தக் கப்பல் 750 கி.மீ. தூரம் வரை உள்ள இலக்கைத் தாக்கும் கே-15 ஏவுகணையைக் கொண்டிருக்கிறது.

இந்தக் கப்பலின் பரிசோதனைகள் முடிவடைந்தை அடுத்து இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐஎன்எஸ் அரிகாட் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, கடற்படை அதிகாரி சூரஜ் பெர்ரி உள்பட கடற்படையின் முக்கிய அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்திய கடற்படைக்கு இன்னும் 18 டீசல்-எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள், 4 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள், 6 எஸ்.எஸ்.என். ரக நீர்மூழ்கி கப்பல்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் ரூ.40,000 கோடி மதிப்பிலான 2 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டம் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, 6,000 டன் எடை கொண்ட எஸ்.எஸ்.என். என்ற ஹன்டர் கில்லர் நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்திய கடற்படைக்கு வலுசேர்க்கும்.

ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் முறையைக் கொண்டுவரும் மத்திய அரசு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios