Asianet News TamilAsianet News Tamil

ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் முறையைக் கொண்டுவரும் மத்திய அரசு!

ஓய்வுதியம் பெறுவோருக்கான புதிய விண்ணப்பப் படிவத்தை ஆகஸ்ட் 30, 2024 அன்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்துவார்.

Centre To Launch New Simplified Pension Form For Retiring Employees
Author
First Published Aug 29, 2024, 10:17 PM IST | Last Updated Aug 29, 2024, 10:32 PM IST

ஓய்வுபெறும் ஊழியர்களுக்கான புதிய எளிமைப்படுத்தப்பட்ட ஓய்வூதிய விண்ணப்பப் படிவத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையின் ஜூலை 16, 2024 தேதியிட்ட அறிவிப்பின்படி, எளிமைப்படுத்தப்பட்ட ஓய்வூதிய விண்ணப்பம் "படிவம் 6-A" என்று அழைக்கப்படும்.

"டிசம்பர் 2024 மற்றும் அதற்குப் பிறகு ஓய்வுபெறவிருக்கும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் பவிஷ்யா/இ-எச்ஆர்எம்எஸ் தளத்தில் இந்தப் படிவம் கிடைக்கும்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் 20 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் இத்தனை நன்மையா! தினமும் ஒரு ரெய்டு போகலாமே!!

இந்தப் புதிய படிவத்தை ஆகஸ்ட் 30, 2024 அன்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய படிவத்தில், மொத்தம் 9 படிவங்கள்/வடிவங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தப் புதிய படிவத்தின் மூலம் பவிஷ்யாவின் செயல்பாட்டில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் கேம் சேஞ்சராக இருக்கும் எனவும் அறிக்கை கூறுகிறது.

ஓய்வூதியம் பெறுவோர் ஒரே ஒரு கையொப்பம் மட்டும் இட்டு விண்ணப்பத்தை பூர்த்திசெய்யும் வசதியைக் கொடுத்துள்ளது. அதே சமயம், பென்ஷன் பெறுவதற்காக விண்ணப்பிப்பது முதல் பென்ஷன் வழங்கும் செயல்முறை வரை முழு செயல்முறையையும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது என அறிக்கை சொல்கிறது.

இந்த மாற்றறம் ஓய்வூதியத்தின் முழு செயல்முறையிலும் காகிதமில்லா நிலையை உருவாக்குவதற்கான பாதையை அமைக்கிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோருக்கு வசதியான வடிவமைப்புடன் இந்தப் படிவம் இருக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

அம்பானியை அசால்டாக வீழ்த்திய அதானி! இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios