Asianet News TamilAsianet News Tamil

அம்பானியை அசால்டாக வீழ்த்திய அதானி! இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம்!!

2024 ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானியும் அவரது குடும்பத்தினரும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அதானி மொத்தம் ரூ.11.6 லட்சம் கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

Gautam Adani Replaces Mukesh Ambani as India's Richest Person sgb
Author
First Published Aug 29, 2024, 8:05 PM IST | Last Updated Aug 29, 2024, 9:53 PM IST

2024 ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை மிஞ்சி கவுதம் அதானியும் அவரது குடும்பத்தினரும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். 2020இல் இதே பட்டியலில் அதானி நான்காவது இடத்தில் இருந்தார். அதானியின் சொத்து கடந்த ஓராண்டில் 95 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஹிண்டன்பேர்க் அறிக்கையைத் தொடர்ந்து அவரது சொத்து மதிப்பு ஏற்றம் கண்டிருப்பதற்குச் சான்றாக இந்த முன்னேற்றம் அமைந்துள்ளது.

"ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு பீனிக்ஸ் பறவை போல் உயர்ந்து, கவுதம் அதானி (62)  மற்றும் அவரது குடும்பம் இந்த ஆண்டு தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட சொத்து மதிப்பு 95% அதிகரித்து, 1,161,800 கோடி ரூபாயாக உள்ளது. அதானி கடந்த 5 ஆண்டுகளில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறார்" என்று ஹுருன் பணக்காரர் பட்டியல் கூறுகிறது.

உணவு வீணாவதைத் தவிர்க்க பிரிட்ஜை முழுசா பயன்படுத்தணும்! இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

"அனைத்து அதானி குழும நிறுவனங்களும் கடந்த ஆண்டில் பங்கு விலைகளில் கணிசமான உயர்வைக் கண்டன. உதாரணமாக, அதானி போர்ட்ஸ் 98% உயர்வைச் சந்தித்தது. புதிய துறைமுகங்கள் மற்றும் கொள்கலன் முனையங்களை கையகப்படுத்துவது தொடர்பான முன்மொழிவு காரணமாக இந்த வளர்ச்சி கிடைத்தது. அதானி எனர்ஜி, அதானி கேஸ், அதானி ட்ரான்ஸ்மிஷன் மற்றும் அதானி பவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலையும் சராசரியாக 76% வளர்ச்சியைப் பெற்றுள்ளன" ஹரூன் கூறுகிறது.

ஜூலை 31, 2024 நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி ரூ.10.14 லட்சம் கோடி சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அம்பானியைத் தொடர்ந்து HCL டெக்னாலஜிஸின் ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.3.14 லட்சம் கோடியாக உள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் சைரஸ் பூனாவாலா மற்றும் அவரது குடும்பம் ரூ. 2.89 லட்சம் கோடி சொத்துக்களுடன் நான்காவது இடத்திலும், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் திலீப் ஷங்வி ரூ. 2.49 கோடி சொத்துகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

ஹுருன் இந்தியாவின் நிறுவனரும் தலைமை ஆராய்ச்சியாளருமான அனஸ் ரஹ்மான் ஜுனைட், "இந்தியா ஆசியாவின் செல்வத்தை உருவாக்கும் இயந்திரமாக வளர்ந்து வருகிறது!" எனக் கூறியுள்ளார். கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் சீனா 25% சரிவைக் கண்டபோதும், இந்தியா 29% வளர்ச்சியைப் பெற்றுள்ளது எனவும் ரஹ்மான் கூறினார்.

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 334 என்ற புதிய சாதனையை எட்டியுள்ளதாக அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெறும் 20 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் இத்தனை நன்மையா! தினமும் ஒரு ரெய்டு போகலாமே!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios