இந்திய எல்லைப்பகுதிக்கு வரும் வழியில் பேருந்தில் சீன ராணுவத்தின் இளம் வீரர்கள் அழுத வீடியோ சமூகவலைதளங்களில் செம வைரலாகிவருகிறது. 

இந்தியா - சீனா இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில், இருதரப்பின் கமாண்டர் அளவிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இருநாடுகளும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டது.

இருநாட்டு ராணுவத்திற்கும் இடையேயான தகவல் தொடர்புகளை பலப்படுத்தவும், தவறான புரிதல்களையும் அனுமானங்களையும் தவிர்க்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும் எல்லை முன்களத்தை நோக்கி கூடுதல் படையினரை அனுப்பக்கூடாது, களத்தில் பரஸ்பரம் உள்ள நிலைகளில் இருந்து முன்னேறக்கூடாது என இருதரப்பு ராணுவமும் ஒப்புக்கொண்டன.

முன்பாக, இந்திய எல்லை பகுதியில் சீன ராணுவம் வீரர்களை அதிகப்படுத்தியபோது, எல்லை பகுதிக்கு பேருந்தில் வந்த இளம் சீன ராணுவ வீரர்கள், சீன தேசபக்தி பாடலை அழுதுகொண்டே பாடிக்கொண்டுவந்த வீடியோவை தைவான் ஊடகம் வெளியிட்டது.

அந்த வீடியோவில் சீன ராணுவத்தை சேர்ந்த இளம் வீரர்கள், அழுதுகொண்டே வந்தனர். அவர்கள் இந்திய ராணுவத்துடன் மோதுவதற்கு பயந்து அழுததாக பார்க்கப்படுகிறது. அந்த வீடியோ இதோ..

Scroll to load tweet…