Asianet News TamilAsianet News Tamil

சீனாவில் இந்திய கலாச்சார தாக்கம்! எல்லையில் உள்ள ஹோடானின் பழமையான வரலாறு!

ஹோடானிய மக்கள் கிருஷ்ண வழிபாட்டைப் பின்பற்றினர். அவர்களின் சொந்த மொழியில் ராமாயணத்தின் பதிப்பைக் கூட வைத்திருந்தனர், அது திபெத்திய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 

India China relations linked with Khotan
Author
First Published Apr 7, 2023, 12:48 PM IST | Last Updated Apr 7, 2023, 12:48 PM IST

சீனாவின் ஜின்ஜியாங் (Jinjiang) பகுதியில் அமைந்துள்ள ஹோடான் (Khotan) முன்னொரு காலத்தில் இந்தியாவின் பண்டைய இராஜ்ஜியமாக இருந்துள்ளது. இந்திய- சீனாவின் எல்லைப் பகுதியிலுள்ள ஹோடான் இந்திய கலாச்சாரத்தின் முக்கிய புறக்காவல் நிலையமாக திகழ்ந்தது. கிமு, கிபி முறையே பல நூற்றாண்டுகளாக படையெடுப்பு, இடம்பெயர்வுகளில் இருந்து தப்பி பிழைத்த இந்த ராஜ்ஜியம், மேற்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து தான் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. ஹோடான்  டிரான்ஸ்-யூரேசிய வர்த்தக ( trans-Eurasian trade) வழிகளில் ஒரு சோலையாக பரவலாக அறியப்பட்டது. 

இந்த பிராந்தியம் பட்டு உற்பத்திக்கும், நகைகளில் பயன்படுத்தப்படும் பச்சை மாணிக்கக் கல் ஆகியவற்றிற்கும் பெயர் போனது. 1006 ஆம் ஆண்டில் ஹோடானை முஸ்லீம் காரா-கானிட் கானேட் (Muslim Kara-Khanid Khanate) கைப்பற்றுவதற்கு முன்பு வரை அது செழிப்பாகவே காணப்பட்டது. இது சின்ஜியாங்கின் இஸ்லாமியமயமாக்கல், துருக்கியமயமாக்கலுக்கு வழிவகுத்தது. இந்தியாவில் இருந்து சீனாவிற்கு பௌத்தம் பரவுவதில் ஹோடான் முக்கிய பங்கு வகித்தது. கிமு முதல் நூற்றாண்டிலேயே இப்பகுதியில் செழிப்பான புத்த நிறுவனங்கள் நிறுவப்பட்டன. 

ஹோடானின் ஆட்சியாளர்கள் மகாயான பௌத்தத்தின் பயிற்சியாளர்களாக இருந்தனர். அவர்கள் வேதம், தாந்த்ரீக மரபுகள் கலப்பதையும், இந்திரன், சிவன், விஷ்ணு, சரஸ்வதி ஆகியவ தெய்வங்களையும் ஒப்புக்கொண்டனர். புத்தரை ஆன்மீக படிநிலையில் (வித்யாகாரரின் கருவூலத்தில் உள்ளது போல) முன்னணியில் வைத்தது. ஹோடானிய மக்கள் கிருஷ்ண வழிபாட்டைப் பின்பற்றினர். அவர்களின் சொந்த மொழியில் ராமாயணத்தின் பதிப்பைக் கூட வைத்திருந்தனர், அது திபெத்திய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 

இந்திய நூல்களில் உத்தரகுரு என்று அழைக்கப்படும் இப்பகுதி பல நூற்றாண்டுகளாக சமஸ்கிருத உலகின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. அதன் மொழிகள் காந்தாரி போன்ற இந்திய பிராகிருதங்களை உள்ளடக்கியது. இது காஷ்மீரி, சமஸ்கிருதம், ஹோடானீஸ் (Khotanese ), சாகா ஆகியவற்றுடன் சில ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்கிறது. பிந்தையது குறிப்பிடத்தக்க அளவு சமஸ்கிருத சொற்களஞ்சியத்தைக் கொண்டுள்ளது. சீன யாத்ரீகரான சுவான்சாங் (Xuanzang),"ஹோடானீஸ் ஆவணங்களுடைய திபெத்திய மொழிபெயர்ப்பின் படி, ஹோடான் கிமு 3 ஆம் நூற்றாண்டில் அசோகா மௌரியாவின் ஆட்சியின் போது வடமேற்கு இந்தியாவில் இருந்து குடியேறியவர்களால் நிறுவப்பட்டது. இந்த குடியேறியவர்களில் காஷ்மீரிகளும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது"எனக் கூறுகிறார். 

இந்த இராஜ்ஜியம் இந்தியாவின் வடமேற்கில் உள்ள காந்தாரா, காஷ்மீரின் பண்டைய இராஜ்ஜியத்துடன் இணைக்கப்பட்டது. கிபி 3 நூற்றாண்டின் முற்பகுதியில் மகாயான சமூகங்களை நீடித்தது. 25 ஆயிரம் வரிகளில் ஞானத்தின் பரிபூரணம், புத்தவதம்சகா சூத்ரா ("மலர் ஆபரணம்" சூத்ரா என்றும் அழைக்கப்படும்) ஆகியவை சீன பௌத்தத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு பௌத்த நூல்கள் ஆகும். இவை முதலில் கிடைத்த நூல்களிலிருந்து மூன்றாம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. 

இந்த ராஜ்யத்தின் ஸ்தாபக புராணங்கள், புத்தர் ஷக்யமுனியின் உத்தரவின் பேரில் ஒரு ஏரியை வடிகட்டுவதை மையமாகக் கொண்டது. இந்த தொன்மங்கள் திபெத்திய மொழியில் காங்யூரில் பாதுகாக்கப்பட்ட இரண்டு ஆவணங்கள், தெங்யூரில் இரண்டு தீர்க்கதரிசன வரலாறுகளின் வடிவத்தில் தனித்துவமாக பொறிக்கப்பட்டுள்ளன. 13ஆம் நூற்றாண்டின் திபெத்திய அறிஞர் சோம்டன் ரிக்பாய் ரால்ட்ரியால் பட்டியலிடப்பட்ட சுமார் இருபது நூல்களில் அவை ஹோடானீஸிலிருந்து திபெத்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஆவணங்களில் ஒன்றான The Prophecy on Mount Goshringa, சமீபத்தில் வெளியிடப்பட்டது. அது புத்தர் பெரிய பரிவாரங்களுடன் ஹோடானுக்கு செல்வதையும், அங்குள்ள பெரிய ஏரியில் வாழும் உயிரினங்களை ஆசீர்வதிப்பதையும் விவரிக்கிறது. 

இதையும் படிங்க: பணத்தை மிச்சம் பண்ண முடியலயா? துளசி செடியை இந்த இடத்தில் வச்சு பாருங்க! வீட்டில் பணமழை தான்!

அதில் நாட்டின் பிற அம்சங்கள், மலை, ஸ்தூபிகள், தளங்கள், அங்கு கொடுக்கப்பட்ட போதனைகள், தர்மத்தின் நடைமுறை போன்றவை இருந்தன. இந்த ஆவணங்களின் முடிவில், புத்தர் தன்னுடைய சீடர் ஷரிபுத்ரா, அரசன் வைஷ்ரவணன் ஆகியோரிடம் தங்கள் அமானுஷ்ய சக்திகளை வரிசைப்படுத்தவும், பெரிய ஏரியை ஆற்றின் போக்கில் வடிகட்டவும் கேட்கிறார். அவர்கள் ஒரு மலையை இரண்டு பெரிய துண்டுகளாக வெட்டி, அதை வழியிலிருந்து நகர்த்தி, ஏரிக்கு அருகிலுள்ள கிஷோ என்ற நதியில் வடிகால் அமைத்தனர். இது இப்போது கரகாக்ஸ் என்று அழைக்கப்படும் நதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

ஹோடானின் ஸ்தாபகத் தொன்மங்கள், மற்றொரு மலைத் தளமான காத்மாண்டு பள்ளத்தாக்குடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருப்பொருளைக் கண்டறிந்துள்ளன. காஷ்மீர் சதீசர் என்ற மலை ஏரியிலிருந்து பிறந்தது என்றும் பேசப்படுகிறது.
காத்மாண்டுவின் புராணக்கதை, இதில் புனிதமான ஸ்வயம்பு மலை முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஸ்வயம்பு-புரானா எனப்படும் நெவார் புத்த உரையின் பல்வேறு பதிப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது. இது 15ஆம் அல்லது 16ஆம் நூற்றாண்டுகளில் முதன்முதலில் இயற்றப்பட்ட ஒரு அநாமதேய படைப்பாகும். அதாவது யார் வெளியிட்டது என்ற தகவல்கள் முழுமையாக இல்லை. வாய்வழி மரபுகளாக இருந்துள்ளன. 

நேபாளத்தில் பல பிரச்சனைகள் இருந்தபோதிலும், காத்மாண்டு பள்ளத்தாக்கில் தர்மம் பிழைத்து வளர்ந்துள்ளது. ஆனால் ஹோடானில் அது இல்லை. ஒரு நாட்டின் இந்த ஆபரணம் ஒரு காலத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வரலாறு பெரும்பாலும் மறந்துவிட்டது. 12ஆம் நூற்றாண்டில், ஹோடானில் பௌத்தம் கடந்த காலத்திலிருந்து சிறிதளவு எஞ்சியிருந்தது. சீனாவின் அதிகாரம் பலமுறை மெழுகி மழுங்கியது. திபெத்தின் ஏகாதிபத்திய எல்லை நீண்ட காலத்திற்கு முன்பே சரிந்தது. பட்டுப்பாதைகள் முக்கியத்துவம் குறைந்தன. இன்று ஹோடான் யூரேசிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பாதையில் ஒரு முக்கிய அடையாளமாக உள்ளது. இது மிகவும் பழமையான காலங்களில் சீனாவில் இந்தியாவின் கலாச்சார தாக்கத்தின் அளவை நினைவூட்டுகிறது. 

இதையும் படிங்க: அட்சய திருதியை 2023: எந்த நேரத்தில் தங்கம், வெள்ளி வாங்கினால், நம் வீட்டில் செல்வம் குவியும் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios