Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் எத்தனை பேருக்கு ஜே.என்.1 மாறுபாடு உறுதியாகி உள்ளது? மத்திய அரசு சொன்ன தகவல்..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக 774 பேருக்கு கொரோனா பாதிப்பு திவாகியுள்ளன

India 774 covid cases and 619 jn.1 variant infections so far Rya
Author
First Published Jan 6, 2024, 3:48 PM IST

ஜே.என்.1 மாறுபாடு காரணமாக உலகின் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் டிசம்பர் மாதம் முதலே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக 774 பேருக்கு கொரோனா பாதிப்பு திவாகியுள்ளன. mygov.in இல் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்தியாவில் 774 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், மொத்த எண்ணிக்கை 4,50,17,378 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 919 அதிகரித்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 4,44,79,804 ஆக உள்ளது.

கோவிட் JN.1 மாறுபாடு: இவை தான் புதிய அறிகுறிகள்.. மருத்துவர்கள் முக்கிய தகவல்..

எனினும் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா, ஜார்கண்ட், கோவா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாதிப்புகள் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தாலும், கேரளா மற்றும் கர்நாடகா ஆகியவை செயலில் உள்ள கோவிட் வழக்குகளின் அதிகபட்ச எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், ஹரியானா, மத்தியப் பிரதேசம், பீகார், அசாம், ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இறப்பு எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால், தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும்  இந்தியா முழுவதும் மொத்தம் 619 பேருக்கு ஜே.என்.1 பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அதன்படி கர்நாடகாவில் 199 பேருக்கும், கேரளாவில் 148 பேருக்கும், மகாராஷ்டிராவில் 110 பேருக்கும், கோவாவில் 47 பேருக்கும் ஜே.என்.1 மாறுபாடு இருப்பது உறுதியாகி உள்ளது. அதே போல் குஜராத்தில் 36 பேருக்கும், ஆந்திராவில் 30 பேருக்கும், தமிழ்நாட்டில் 26 பேருக்கும், டெல்லியில் 15 பேருக்கும், ராஜஸ்தானில் 4 பேருக்கும், தெலுங்கானாவில் இருந்து 2 பேருக்கும் பதிவாகியுள்ளன. ஒடிசா மற்றும் ஹரியானாவில் தலா ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இனி இந்த மாநிலத்தில் சுவாச நோய், காய்ச்சல் நோயாளிகளுக்கு கோவிட் சோதனை கட்டாயம்..

இதனிடையே தொற்று பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இணை நோய் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios