மெத்தைக்கு அடியில் கட்டு கட்டாக பணம்.. அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர்..
நேற்று நள்ளிரவு பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பல்வேறு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கு வருவதால் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று நள்ளிரவு பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பெங்களூரு மாநகராட்சியின் 95-வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் இந்த அஸ்வத்தம்மா. இவரின் கணவர் அம்பிகாபதி ஒப்பந்ததாரர் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமான ஆர்.டி. நகர் பகுதியில் உள்ள 2 வீடுகளில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதில் பூட்டி வைத்திருந்த அறையின் உள்ளே மெத்தைக்கு அடியில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 23 அட்டைப்பெட்டிகளில் ரூ.42 கோடி மதிப்புள்ள ரூ.500 நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஒரு சாதாரண கவுன்சிலர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கவுன்சிலர் வீட்டில் இவ்வளவு பணம் என்றால், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் வீட்டில் எவ்வளவு பணம் இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அஸ்வத்தம்மாவின் கணவர் அம்பிகாபதி கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும், BBMP ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இந்த அமைப்பு தான் முந்தைய பாஜக அரசுக்கு எதிராக சங்கம் 40% கமிஷன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.