ரூ.300 கோடி பறிமுதல்.. வருமான வரி சோதனையில் இதுவே முதன்முறை.. யார் இந்த தீரஜ் சாஹு?
காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாஹுவிற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.300 கோடிக்கும் மேலான ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது
காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹுவின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை பேசுப்பொருளாக மாறி உள்ளது. கடந்த 6-ம் முதல் நடந்த இந்த சோதனையின் போது கோடிக்கணக்கான ரொக்கப்பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். கடந்த 5 நாட்களாக பணம் எண்ணப்பட்டு வந்த நிலையில் கைபற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.350 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நடவடிக்கையில் இவ்வளவு பணம் கைப்பற்றப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
யார் இந்த தீரஜ் சாஹு?
தீரஜ் சாஹுவின் குடும்பத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நீண்டகால தொடர்பு உள்ளது. 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, தீரஜ் சாஹுவின் தந்தை பல்டியோ, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்திய அரசுக்கு ரூ.47 லட்சம் மற்றும் 47 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தீரஜ் சாஹுவுக்கு ஐந்து சகோதரர்கள் இருந்தனர், அதில் அவர் உட்பட நான்கு பேர் அரசியலில் நுழைந்தனர். அவரது சகோதரர்களில் ஒருவரான ஷிவ் பிரசாத் சாஹு மக்களவை எம்.பி.யாக இருந்தவர்., ராஞ்சி தொகுதியில் இரண்டு முறை காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றார். அவர் ஜனவரி 2001 இல் தனது 67 வயதில் இறந்தார். மற்றொரு சகோதரர் நந்த்லால் சாஹூவும் இறந்துவிட்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தீரஜின் மற்றொரு சகோதரர் கோபால் சாஹு, 2019 தேர்தலில் ஹசாரிபாக்கில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார், ஆனால் தோல்வியடைந்தார். மற்றொரு சகோதரர் உதய் சாஹூ காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இணைந்துள்ளார்.
ஜார்கண்டில் உள்ள சத்ரா தொகுதியில் தீரஜ் சாஹு இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை. ஜூன் 2009 இல், அவர் இடைத்தேர்தலில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஜூலை 2010 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த 2018 மே மாதம் மூன்றாவது முறையாக ராஜ்யசபா உறுப்பினரானார்.
ஷிவ் பிரசாத் சாஹுவின் ஆட்சிக் காலத்தில், குடும்பம் கணிசமான அதிகாரத்தை கொண்டிருந்தது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான காங்கிரஸின் வேட்பாளர்கள் மற்றும் அமைச்சர் பதவிகள், ஷிவ் பிரசாத் சாஹுவின் பரிந்துரைகளின் பேரில் முடிவு செய்யப்பட்டது. அவர் இந்திரா காந்திக்கும் நெருக்கமானவராக இருந்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு நிதி மற்றும் தேர்தல் அரசியலில், குறிப்பாக ஜார்கண்டின் லோஹர்டகா மற்றும் அண்டை மாவட்டங்களில் ஆதரவளிப்பதில் சாஹு குடும்பம் தொடர்ந்து முக்கியப் பங்காற்றியுள்ளது. காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளில் அதன் முக்கிய பங்கு காரணமாக அவர்களின் வீடு 'லோஹர்டகாவின் வெள்ளை மாளிகை' என்று குறிப்பிடப்படுகிறது.
குறிப்பிடத்தக்க வகையில், சாஹு குடும்பத்தின் செல்வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டது, அவர்களின் வீட்டிற்கு திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வருகை தந்தனர். தீரஜ் சாஹுவின் குடும்பத்தின் முதன்மை வணிகம் மதுபானத் தொழிலை மையமாகக் கொண்டது, அவர்களின் பெரும்பாலான நிறுவனங்கள் ஒடிசாவில் அமைந்துள்ளன.
தம்பி... இந்த 300 கோடி யாருடைய பணம்? ராகுல் காந்தியின் விளக்கம் கேட்கும் ஜே. பி. நட்டா!
தீரஜ் சாஹுவின் சொத்துக்கள்
2018 ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்திடம் தீரஜ் சாஹு தாக்கல் செய்த வேட்பு மனுவின் படி, அவரது சொத்து மதிப்பு ரூ. 34 கோடிக்கும் அதிகமாக உள்ளது. அசையும் சொத்துகள் ரூ.20.4 கோடியும், விவசாய நிலம், சொத்துக்கள் போன்ற அசையா சொத்துக்கள் ரூ.14.43 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். அவரிடம் ரேஞ்ச் ரோவர், ஒரு BMW, ஒரு ஃபார்ச்சூனர் மற்றும் ஒரு பேஜரோ என மொத்தம் 4 கார்கள் உள்ளன. அவரது ஆண்டு வருமானம் சுமார் 1 கோடி ரூபாய். மேலும், அவரது மனைவி ரூ.94.5 லட்சம் மதிப்புள்ள 3.1 கிலோ தங்கமும், தீரஜ் சாஹு ரூ.26.16 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளும் வைத்திருக்கிறார்.
தீரஜ் சாஹு பால்டியோ சாஹு ஷிவ் பிரசாத் சாஹு - குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனத்தில் ரூ. 2.5 கோடி முதலீடு செய்துள்ளார், மேலும் பல்டியோ சாஹு அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் ரூ. 2 கோடி முதலீடு செய்துள்ளார். மேலும், டெல்லியில் உள்ள ஒரு வில்லாவிற்கு முன்பணமாக ரூ.2.32 கோடி செலுத்தியுள்ளார். தீரஜ் சாஹு ராஞ்சி பல்கலைக்கழகத்தின் மார்வாரி கல்லூரியில் இருந்து 1979 இல் இளங்கலை (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார். தீரஜ் சாஹுவின் பெயரில் இதுவரை குற்றவழக்குகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.