தம்பி... இந்த 300 கோடி யாருடைய பணம்? ராகுல் காந்தியின் விளக்கம் கேட்கும் ஜே. பி. நட்டா!

பௌத் டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன வளாகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மொத்த தொகை ₹350 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Whose money... BJP questions Rahul Gandhi over Rs 300 crore Dhiraj Sahu recovery sgb

காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி தீரஜ் சாஹூவுக்குச் சொந்தமான இடத்தில் ரூ.300 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

ஒடிசாவின் பலங்கிரில் உள்ள சாஹுவின் சகோதரருக்குச் சொந்தமான டிஸ்டில்லரி நிறுவனத்தின் வளாகத்தில் இருந்து ரூ.300 கோடிக்கும் அதிகமான பணத்தை வருமான வரித்துறையினர் மீட்டுள்ளனர். தேடுதல் வேட்டை ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஞாயிறு காலை புதிய ரூபாய் நோட்டு எண்ணும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பணத்தை எண்ணும் வேலை நடக்கிறது.

இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்ட பாஜக தேசியத் தலைவர் ஜே. பி. நட்டா, “தம்பி, நீங்களும் உங்கள் தலைவர் ராகுல் காந்தியும் இதற்கு பதில் சொல்ல வேண்டும். இது புதிய இந்தியா; இங்கு அரச குடும்பத்தின் பெயரால் மக்களைச் சுரண்டுவது அனுமதிக்கப்படாது. நீங்கள் ஓடி ஒளிந்தாலும் சட்டம் தன் கடமையைக் கைவிடாது" என்று தெரிவித்துள்ளார்.

லிங்க் ஷேர் பண்ணும்போது உஷாரா இருங்க... 36,000 இணைய முகவரிகளை பிளாக் செய்த மத்திய அரசு!

மேலும், "ஊழலுக்கு காங்கிரஸ் உத்தரவாதம் என்றால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு மோடி உத்தரவாதம். பொதுமக்களின் பணம் மீண்டும் அவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்” என்றும் நட்டா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி விளக்கம் அளிக்காதது குறித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியும் கேள்வி எழுப்பியுள்ளார்.

"திரஜ் சாஹுவுக்கு எதிரான வருமான வரித்துறை சோதனைகளில் ராகுல் காந்தி ஏன் அமைதியாக இருக்கிறார் என்று நான் கேட்க விரும்புகிறேன்? நீங்கள் எப்போதும் வருமான வரித்துறையை விமர்சிக்கிறீர்கள், ஆனால் இப்போது ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?" கிஷன் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

சாஹு குடும்பம் நாட்டு மதுபானங்களை தயாரிக்கும் பௌத் டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவன வளாகத்தில் இருந்து ₹300 கோடிக்கும் அதிகமான பணத்தை வருமான வரித்துறை மீட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மொத்த தொகை ₹350 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாஹுவுடன் வீடுகள் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களின் இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டிருக்கிறது.

சத்தீஸ்கர் முதல்வராகும் விஷ்ணு தியோ சாய்! பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios