“தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாத நிலை உள்ளது” டி.கே சிவக்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க முடியாத நிலை உள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தற்போது டெல்லி சென்றுள்ளார். நேற்று மத்திய ஜலசக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஜெகாவத்தை சந்தித்து பேசிய அவர், நிலுவையில் உள்ள கர்நாடக நீர்பாசன திட்டங்களுக்கு அனுமதி கோரினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.கே சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடும் சூழல் தற்போது இல்லை என்று தெரிவித்தார். மேலும் “ பருவமழை தாமதமானதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
எங்கள் மாநிலத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே தண்ணீர் போதவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடகாவில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தமிழ்நாட்டிற்கு தற்போது காவிரி நீரை திறந்துவிடும் சூழல் இல்லை.” என்று தெரிவித்தார்.
Indian Navy : இதுவே முதல் முறை.. வியட்நாமிற்கு அதிநவீன போர்க்கப்பல் - பரிசளித்த இந்தியா!
தொடர்ந்து பேசிய அவர், வரும் 8 அல்லது 9-ம் தேதி, கர்நாடகாவில் அனைத்து மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். கே.ஆர்.எஸ் அணை பகுதியில் இந்த மாநாட்டை நடத்துமாறு கேட்டுள்ளேன். ஏனெனில் அங்கு மாநாடு நடத்தினால் தான் அந்த அணையில் உள்ள உண்மையான நீர் இருப்பை மத்திய மற்றும் தமிழ்நாட்டின் அதிகாரிகள் நேரில் பார்க்க முடியும்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மேகதாது அணை குறித்து பேசிய டி.கே.சிவக்குமார் “ மேகதாது குறித்து சட்டத்துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி எனது கருத்தை தெரிவிக்கிறேன். இந்த திட்டம் எந்த அளவுக்கு கால தாமதம் ஆகிறதோ, அந்த அளவுக்கு திட்ட மதிப்பீடு அதிகரிக்கும். இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும். ரூ.9,000 கோடியாக இருந்த திட்ட மதிப்பு தற்போது ரூ.13,000 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆனால் தமிழ்நாட்டினர் மேகதாது திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நன்றாக மழை பெய்யும், காவிரி ஆற்றில் 700 டி.எம்.சி தண்ணீர் கடலில் சென்று கலக்கிறது. இதில் வெறும் 40 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே நாம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை. இதுகுறித்து அம்மாநிலத்திற்கு விளக்கம் அளிக்க முடிவு செய்துள்ளோம். இந்த விஷயத்தில் அரசியலை தாண்டி முடிவு எடுக்க வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.
ஓடும் பேருந்தில் பயங்கர தீ விபத்து! தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறல்.. 25 பேர் உடல் கருகி பலி..!