Indian Navy : இதுவே முதல் முறை.. வியட்நாமிற்கு அதிநவீன போர்க்கப்பல் - பரிசளித்த இந்தியா!
உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட இந்த சிறிய வகை INS Kirpan என்ற போர்க்கப்பல், கடந்த புதன்கிழமை அன்று நமது இந்திய நாட்டில் இருந்து வியட்நாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையில் இருந்த செயல்பாட்டில் உள்ள சிறிய ரக போர்க்கப்பல் ஒன்று தற்பொழுது வியட்நாம் நாட்டை நோக்கிய தனது பயணத்தை துவங்கியுள்ளது. இந்த சிறிய ரக போர்க்கப்பலை வியட்நாமிற்கு அன்பளிப்பாக இந்தியா கொடுத்துள்ளது.
ஒரு நாட்டிற்கு அன்பளிப்பாக போர்க்கப்பலை இந்தியா கொடுப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட இந்த சிறிய வகை INS Kirpan என்ற போர்க்கப்பல் கடந்த புதன்கிழமை அன்று நமது இந்திய நாட்டில் இருந்து வியட்நாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் வியட்நாம் என்று இரு நாடுகளும், கடந்த சில ஆண்டுகளாகவே தங்கள் உறவுகளையும், எல்லைகளையும் வலுப்படுத்தி வருகின்றன. குறிப்பாக இரு நாடுகளும் தங்களுடைய பாதுகாப்பில் மிகுந்த கவனத்தை செலுத்தி வரும் இந்த நேரத்தில், இந்தியாவின் இந்த பரிசு மிகுந்த முக்கியம்வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படியுங்கள் : திருநங்கைகள் குழந்தையைத் தத்தெடுக்கக் கூடாதா?
இதற்கு முந்தைய காலகட்டங்களில் சிறிய வகை படகுகளையும், சில ராணுவம் சார்ந்த பொருட்களையும் மாலத்தீவு மற்றும் மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா பரிசளித்துள்ளது. அதேபோல ஒருமுறை, ஒரு நீர் மூழ்கி கப்பல் ஒன்றையும் மியான்மர் நாட்டுக்கு இந்தியா கொடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் செயல்பாட்டில் இறுகின்ற ஒரு போர்க்கப்பலை மற்றொரு நாட்டுக்கு இந்தியா பரிசளிப்பது இதுவே முதல் முறையாகும்.
வியட்நாம் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் Gen Phan Van Giang, இம்மாத முற்பகுதியில் இந்தியாவிற்கு வருகைதந்தபோது இந்த பரிசளிப்பு குறித்து அறிவிக்கப்பட்டது. இந்தியா பரிசளித்த இந்த வகை போர்க்கப்பலில் தொலைதூரம் அல்லாத குறுகிய மற்றும் நடுத்தர தூரத்தில் உள்ள எதிரிகளை தாக்கும் துப்பாக்கிகள் உள்ளது.
மேலும் இந்த போர்க்கப்பலில் Chaff லாஞ்சர்களும், நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள எதிரிகளை தாக்கும் ஏவுகணைகளும் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் பரிசளிக்கப்பட்ட போர்கப்பலோடு ஏவுகணைகளும் பரிசளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள் : அண்ணன் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொல்ல சதி - தம்பி மீது புகார்