Asianet News TamilAsianet News Tamil

60 முக்கிய நதிகளை இணைக்கு மாபெரும் திட்டம் !! 87 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி மோடி அறிவிப்பு !!!

in india main rivers wil be connect...modi annouced
in india main rivers wil be connect...modi annouced
Author
First Published Sep 2, 2017, 7:24 AM IST

60 முக்கிய நதிகளை இணைக்கு மாபெரும் திட்டம் !!  87 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி மோடி அறிவிப்பு !!!நாட்டில் உள்ள 60 முக்‍கிய நதிகளை இணைக்‍கு மிகப்பெரிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதற்காக 87 பில்லியன் டாலர் நிதி ஒதுக்‍கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் மும்பை உள்ளிட்ட நரகங்கள் வெள்ளத்தில் மிதக்‍கின்றன.

இதேபோல், நேபாளம், பங்களாதேஷ் நாடுகளில் பெய்த கனமழையால் இந்தியாவின் வடகிழக்‍கு மாநிலங்கள் மோசமான சேதத்தை சந்தித்தன.

இதனால், லட்சக்‍கணக்‍கானோர் வீடுகளை இழந்து தவித்து வருவதுடன், ஏராளமான விளைநிலங்களும் சேதமடைந்து சாகுபடி பெருவாரியாக பாதிக்‍கப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி விமானம் மூலம் வெள்ள சேத விவரங்களை பார்வையிட்டார்.

இந்நிலையில், கங்கை உள்ளிட்ட நாட்டின் 60 முக்‍கிய நதிகளை இணைக்‍கும் புதிய திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திரமோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்மூலம், வெள்ள நீர் வடிவதற்கு தேவையான வழி கிடைக்‍கும் என்றும், வறட்சி நிலவும், நாட்டின் பிற மாநிலங்களுக்‍கு நீர் ஆதாரம் கிடைக்‍கும் என்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்திற்காக 87 பில்லியன் டாலர் ஒதுக்‍கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். முதல் கட்டமாக மத்திய பிரதேசம், மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தும், நதிகளான கென் மற்றும் பெட்வா நதிகளை இணைக்‍கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தைத் தொடர்ந்து கோதாவரி, மகாநதி, நர்மதா உள்ளிட்ட 60 நதிகள் படிப்படியாக இணைக்‍கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios