“இதுமட்டும் நடந்தால் இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.15 ஆக குறையும்..” நிதின் கட்கரி சொன்ன தகவல்
போக்குவரத்து விஷயத்தில் சில நிபந்தனைகளை கடைபிடித்தால், நாட்டில் எரிபொருள் விலையை லிட்டருக்கு ரூ.15 ஆக குறைக்க முடியும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

டெல்லி, பெங்களூரு, மும்பை என அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருப்பது போல், போக்குவரத்து விஷயத்தில் சில நிபந்தனைகளை கடைபிடித்தால், நாட்டில் எரிபொருள் விலையை லிட்டருக்கு ரூ.15 ஆக குறைக்க முடியும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல், 15 ரூபாய் என்பது ஒரு கனவாகத் தோன்றினாலும், எரிபொருளின் மீதான நம்பிக்கை குறைந்து, மக்கள் தங்கள் வாகனங்களை இயக்குவதற்கு மின்சாரம் மற்றும் எத்தனாலைச் சற்று அதிகமாகச் சார்ந்து இருந்தால் இந்த நிலைமை நனவாகும் என்று நிதின் கட்கரி கூறினார்.
ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்காரி, “சராசரியாக 60% எத்தனால் மற்றும் 40% மின்சாரம் எடுத்தால் பெட்ரோல் லிட்டருக்கு ₹15 என்ற விகிதத்தில் கிடைக்கும், மேலும் மக்கள் பயனடைவார்கள். மாசு மற்றும் இறக்குமதி குறையும். இறக்குமதிக்கு செலவு செய்யப்படும் ₹16 லட்சம் கோடி, விவசாயிகளின் வீடுகளுக்குச் செல்லும்.” என்று தெரிவித்தார்.
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல்
அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்திய நிதின் கட்கரி, நாட்டின் விவசாயிகளைப் பாராட்டினார். மேலும் "விவசாயிகள் உணவு வழங்குபவர்களாக மட்டுமல்ல, ஆற்றல் வழங்குபவர்களாகவும் மாற வேண்டும் என்ற எண்ணத்தில் நமது அரசாங்கம் உள்ளது, இனி அனைத்து வாகனங்களும் விவசாயி உற்பத்தி செய்யும் எத்தனாலில் இயங்கும்" என்று தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய அவர் "ஆட்டோமொபைல் துறையின் லாபம் ரூ.7.55 லட்சம் கோடி, இத்துறையில் 4.5 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இந்தத் துறையானது அரசுக்கு அதிகபட்ச ஜிஎஸ்டியை வழங்குகிறது. இந்தத் தொழிலை ரூ.15 லட்சம் கோடியாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இந்தத் தொழில் 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும்” என்று தெரிவித்தார்.
“ இந்த மோசமான உணவுக்கு ரூ.250 கொடுக்கணுமா” வந்தே பாரத் ரயில் பயணியின் வைரல் ட்வீட்.. IRCTC பதில்