“ இந்த மோசமான உணவுக்கு ரூ.250 கொடுக்கணுமா” வந்தே பாரத் ரயில் பயணியின் வைரல் ட்வீட்.. IRCTC பதில்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சொகுசு ரயிலின் உணவு தரம் குறித்து ரயில் பயணி ஒருவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஹிமான்ஷு முகர்ஜி என்ற அந்த நபர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில், வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்ட போது வழங்கப்பட்ட உணவுக்கும் தற்போது வழங்கப்படும் "பழைய" உணவுக்கும் இடையிலான ஒப்பீட்டை விளக்குவதற்காக புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
மட்கான் சந்திப்பிலிருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயிலில் பயணித்தபோது, அங்கு பரிமாறப்பட்ட மோசமான உணவின் புகைப்படத்தை பதிவிட்டுள்லார். அந்த பதிவில் 22230 வந்தே பாரத் தொடக்க ஓட்டத்தில் உங்கள் அனைவருக்கும் சுவையான உணவு இலவசமாக வழங்கப்பட்டது" என்று குறிப்பிட்டுட்டுள்ளார்.
மேலும் சமீபத்திய பயணத்தின் போது மோசமான உணவுப் பொருட்களின் தரம் குறித்து விரிவாகக் கூறினர், "இன்று 22230 MAO-CSMT வந்தே பாரத். பரிதாபத்திற்குரிய ஒரே வார்த்தை இதற்கு விளக்கமளிக்கிறது. கல் போன்ற பன்னீர், குளிர்ந்து போன உணவு, உப்பு அதிகமான உப்பு பருப்பு.. ஆர்வமுள்ள பயணிகள் இந்த உணவுக்காக 250 ரூபாய் செலுத்துகிறார்கள். தயிர், சானிடைசர், முக்கியமாக தரம் ஆகியவற்றை காணவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “ உங்களால்அழைக்கப்பட்ட விருந்தினர்கள் நல்ல உணவை ருசிக்கும் போது, ஒரு சாதாரண கட்டணம் செலுத்தும் பயணி ஏன் அதே தரமான உணவைப் பெற முடியாது என்பதற்கு தயவுசெய்து எனக்கு ஒரு நல்ல விளக்கத்தைக் கொடுங்கள். இதுபோன்ற அனைத்து வேலைகளும் ஏற்கனவே பயணிகளிடம் மோசமான தோற்றத்தை உருவாக்கியுள்ளன.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இந்த ட்வீட் பலவிதமான எதிர்வினைகளை பெற்றது. "இந்தியாவின் நவீன உயர் தொழில்நுட்ப வந்தே பாரத் எக்ஸ்ப் பிராண்ட் படத்தை IRCTC இப்படி தான் சேதப்படுத்துகிறது.” என்று ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். கோவா ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளைப் பார்க்கிறது. எனவே, தயவுசெய்து கேட்டரிங் ஒப்பந்ததாரரை சஸ்பெண்ட் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.” என்று மற்றொரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அந்த ரயில் பயணியின் புகாருக்கு IRCTC , "உணவு தயாரித்தல் மற்றும் விநியோகம் உட்பட எங்கள் சேவையின் அனைத்து அம்சங்களிலும் தரத்தின் மிக உயர்ந்த தரத்தை பராமரிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். PNR மற்றும் மொபைலைப் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம். ” என்று குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே அந்த ரயில் பயணியின் ட்வீட் 133K பார்வைகளையும், சுமார் 300 ரீ ட்வீட்களையும் பெற்றுள்ளது.
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல்