டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்குமாக, மக்கள் மனதை கவரும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதன் படி, இனி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டால் நுகர்வோருக்கு முதல் இரண்டு மணி நேரத்திற்கு தலா ரூ.50 அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ. 100  டெல்லி மின்வாரியம் வழங்கும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை, ஆளும் பாரதிய ஜனதா கட்சி நழுவ விட்டதை அடுத்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இது ஒரு பக்கம் இருக்க, வரும் நாடாளுமன்ற தேர்தலில், எப்படியாவது பாஜக வை வீழ்த்த வேண்டும் என திட்டம் போட்டு காத்திருக்கும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து மக்களுக்கு இனிமையான செய்திகளை வழங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதி தான், வெற்றி பெற்ற கையோடு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மற்றும் ராஜஸ்தான் மாநில அரசு. இந்த நிலையில், மற்ற மாநில ஆட்சியை பார்த்துக்கொண்டு, டெல்லியை கோட்டைவிடக் கூடாது என திட்டம் போட்டு உள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், இனி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டால் நுகர்வோருக்கு, நேர கணக்குபடி பணம் வழங்கப்படும் என தெரிவித்து  உள்ளார்.

இவருடைய இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.