IBPS PO முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது.. மெயின்ஸ் தேர்வு எப்போது..? முழு விவரம் இங்கே..

பிபிஎஸ் ஆர்ஆர்பி PO முதல்நிலை தேர்வு 2022 ஆகஸ்ட் 20 , 21 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS) தற்போது IBPS RRB PO ப்ரீலிம்ஸ் தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது. தேர்வுகள் தங்களது முடிவுகளை https://ibpsonline.ibps.in/ என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

ibps rrb po result 2022 out - direct click here

இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS), ப்ரோபேஷனரி அதிகாரி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள 6,432 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படவுள்ளன.

இந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள், முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று கட்டங்களாக தேர்வு செய்யப்படுவர். முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு 60 நிமிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும். தேர்வில் வெற்றிபெறும் விண்ணப்பதாரர்கள் 200 மதிப்பெண்கள் கொண்ட 3 மணிநேரம் மெயின் தேர்வில் கலந்துகொள்ள தகுதியுடையவர்கள். மெயின் தேர்வில் தேர்ச்சி பெரும் தேர்வர்கள், நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

மேலும் படிக்க:SBI வங்கியில் காலியாக உள்ள 665 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ..

இந்நிலையில் ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி PO முதல்நிலை தேர்வு 2022 ஆகஸ்ட் 20 , 21 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS) தற்போது IBPS RRB PO ப்ரீலிம்ஸ் தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது. தேர்வுகள் தங்களது முடிவுகளை https://ibpsonline.ibps.in/ என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

பதிவு எண், பிறந்த தேதி, உள்நுழைவு ஐடி ஆகியை உள்ளீடு செய்து மதிப்பெண்களை பார்த்துக் கொள்ளலாம். ஐபிபிஎஸ்யின் அதிகாரபூர்வ இணையதளமான www.ibps.in சென்று தேர்வர்கள் தங்களது முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். மேலும் கட் ஆஃப் மற்றும் மெயின் தேர்வுகான தகுதிபட்டியல் ஆகியவற்றையும் IBPS அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க:பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்.. தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்

இதனிடையே IBPS RRB PO Mains Exam 2022 வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் ( IBPS RRB PO Mains (Final) Result 2022) அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளுவது எப்படி..? 

1. முதலில் https://www.ibps.in/. என்ற இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும்

2, முகப்பு பக்கத்தில் இருக்கும் ”Click Here to Check IBPS RRB Probationary Officer Scale 1  Result 2022” என்பதை கிளிக் செய்ய வேண்டும்

3, https://ibpsonline.ibps.in/. என்ற புதிய இணையதளம் பக்கம் திரையில் தோன்றும்.

4, அதில் தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, உள்நுழைவு ஐடி ஆகியை உள்ளீடு செய்து log in செய்ய  வேண்டும்.

5, பின்னர் IBPS RRB PO Prelims Exam 2022 Result என்பதை கிளிக் செய்ய வேண்டும்.  

6, இப்போது திரையில்  IBPS PO Prelims Result 2022 மதிப்பெண் பட்டியல் தெரியும். அதனுடன் IBPS RRB PO Result 2022 Cut Off Marks & Merit List ஆகியவை பார்த்துக் கொள்ளலாம்.

7, முக்கியமாக IBPS RRB PO Mains Exam 2022 தேதியை பார்த்துக் கொள்ள வேண்டும்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios