ias officer complaint against mla issue

தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள்இருவர் பெண் கலெக்டரிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரம் குறித்து ஐ.ஜி. அந்தஸ்துக்கு குறைவில்லாத அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். 

மகபூபாபாத் மாவட்ட கலெக்டர் ப்ரீத்தி மீனாவை கை தொட்டுப் பேசி, சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியின் போது, எம்.எல்.ஏ. சங்கர் நாயக் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. அதேபோல, ஜன்கான் மாவட்டத்தின் கலெக்டர்தேவசேனாவிடம், எம்.எல்.ஏ. யடகிரி ரெட்டி தவறாக நடந்து கொண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. 

இதில், மகபூபாபாத் எம்.எல்.ஏ. சங்கர் நாயக் மீது போலீசில் கலெக்டர் ப்ரீத்தி மீனா புகார் செய்ததையடுத்து, அவரை போலீசார் ைகது செய்தனர். பின்னர் ஜாமீனில் எம்.எல்.ஏ. வெளியே வந்தார்.

இந்நிலையில், இரு மாவட்ட கலெக்டர்களிடம் எம்.எல்.ஏ.க்கள் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி தலைமைச் செயலாளர் எஸ்.பி. சிங்கிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமைப்பின் தலைவர் பி.பி. ஆச்சார்யா புகார் மனு அளித்தார்.

இது குறித்து தெலங்கானா அரசு வௌியிட்ட அறிவிப்பில், “ ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமைப்பின் தலைவர் பி.பி. ஆச்சார்யா, தலைமைச் செயலாளர் எஸ்.பி. சிங்கை சந்தித்தார். அப்போது, பெண் கலெக்டரிடம், எம்.எல்.ஏ.க்கள் நடந்து கொண்ட விதம் குறித்து ஐ.ஜி. அந்தஸ்துக்கு குறைவில்லாத பெண் போலீஸ் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த விசயத்தில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த முதல்வர் சந்திரசேகர் ராவ், தலைமைச் செயலாளருக்கும் நன்றி தெரிவித்தார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.