Asianet News TamilAsianet News Tamil

பணிப்பெண்ணை சித்திரவதை செய்த புகாரில் சீமா பத்ரா கைது... இது பொய்யான குற்றச்சாட்டு என கூச்சல்!!

தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக மூத்த தலைவர் சீமா பத்ரா தெரிவித்துள்ளார். 

i am being framed says seema patra who arrested on allegations of torturing tribal woman
Author
First Published Aug 31, 2022, 8:00 PM IST

தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக மூத்த தலைவர் சீமா பத்ரா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரை சேர்ந்தவர் சீமா பத்ரா. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மகேஷ்வர் பத்ராவின் மனைவி. பா.ஜ.க.வின் மூத்த தலைவராக இருந்து வருகிறார். கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான பழங்குடியின பெண் சுனிதா என்பவரை பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ரா மற்றும் சீமா பத்ரா தம்பதியினர் வீட்டு வேலைக்காக பணியமர்த்தியுள்ளனர். பின்னர், டெல்லியில் வசிக்கும் அவர்களது மகள் வத்சலா பத்ராவின் வீட்டில் வேலை செய்ய சுனிதா அனுப்பி வைக்கப்பட்டார். வத்சலா டெல்லியில் இருந்து மாற்றப்பட்டதும், சுனிதா மீண்டும் ராஞ்சிக்கு வந்து, சீமாவின் வீட்டில் பணிபுரிந்தார். இந்த நிலையில், சுனிதாவை சீமா துன்புறுத்தத் தொடங்கி உள்ளார்.

இதையும் படிங்க: சோனியா காந்தியின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார்… டிவிட்டரில் கட்சி நிர்வாகிகள் இரங்கல்!!

i am being framed says seema patra who arrested on allegations of torturing tribal woman

பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் கொடுமை தாங்காமல், தனது சொந்த கிராமத்திற்கு செல்ல அனுமதி கேட்டுள்ளார். ஆனால், சீமா சுனிதாவை அடித்து ஒரு அறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதை பற்றி ஜார்க்கண்ட் அரசின் பணியாளர் துறை அதிகாரி ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே போலீசார் சீமாவின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுனிதாவை ஆகஸ்ட் 22 அன்று மீட்டனர். பாஜக தலைவரின் அசோக் நகர் இல்லத்தில் இருந்து ராஞ்சி போலீசார் அவரை மீட்டனர். சீமாவின் வீட்டில் தான் அனுபவித்த கொடுமைகளை சுனிதா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜனாதிபதி வழங்கிய அன்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றி - சத்குரு

i am being framed says seema patra who arrested on allegations of torturing tribal woman

அங்கு தனது பற்களை இரும்பு கம்பியால் உடைத்ததாகவும், சூடான பாத்திரங்களால் உடம்பில் எரித்ததாகவும், சிறுநீரை நக்க வைத்தனர், தன் நாக்கைப் பயன்படுத்தி கழிப்பறையை சுத்தம் செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறினார். எனக்கு உணவு, தண்ணீர் கூட கொடுக்காமல் அறையில் அடைத்து வைக்கப்பட்டேன். ஆனால், பத்ரா தம்பதியின் மகன் ஆயுஷ்மான் என்பவர் என்னை தன் தாயிடமிருந்து காப்பாற்ற முயற்சி செய்வார். அவரால் தான் நான் உயிருடன் இருக்கிறேன் என கூறினார். இந்த நிலையில் தனது வீட்டுப் பணியாளரை கொடூரமாக தாக்கிய ஜார்க்கண்ட் பாஜக தலைவர் சீமா பத்ரா இன்று கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இவை பொய்யான குற்றச்சாட்டுகள், அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள். இதில் நான் சிக்கியிருக்கிறேன் என்று சீமா பத்ரா தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios