திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் திருப்பதிக்கு பெயர் போன லட்டு மட்டும் பிளாஸ்டிக் கவர்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

பொதுவாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்தபோது, கடைகளில் நூல் பைகள் விற்பனைக்கு வந்தது. ஆனால் லட்டு எடுத்து செல்ல மட்டும் சில நாட்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்தது.

இந்த நிலையில் தற்போது லட்டு கூட பிளாஸ்டிக் கவர்களில் வழங்கக் கூடாது என முடிவு எடுத்த திருப்பதி தேவஸ்தானம் போர்டு இனி அட்டை பெட்டிகளில் லட்டு வழங்கலாம் என்ற முக்கிய முடிவு எடுத்து உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்காக தினமும் ஐந்து லட்சம் வரை லட்டுக்கள் வரை தயார் செய்து விற்கப்படுகிறது. 

இனி லட்டு விற்பனை சிறிய வகை பெட்டிகளில் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பெட்டிகள் தற்போது செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏழுமலையானின் உருவப்படங்கள் தேவஸ்தான முத்திரையுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பெட்டியில் வைக்கப்படும் லட்டு, குறைந்தது பத்து நாட்களுக்கு மேல் அப்படியே கெடாமல் இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.