Asianet News TamilAsianet News Tamil

2018ம் புத்தாண்டில் புறப்பட்டு 2017ல் தரை இறங்கிய விமானம்...!

Hawaiian Airlines HA446 did a time travel from 2018 to 2017
Hawaiian Airlines HA446 did a time travel from 2018 to 2017
Author
First Published Jan 4, 2018, 5:03 PM IST


2018ம் புத்தாண்டில் புறப்பட்ட விமானம் சில நேரங்களில் பின்னோக்கி பயணம் செய்து, 2017ம் ஆண்டில் தரை இறங்கியுள்ள சம்பவங்கள் நடந்துள்ளன.

உலகளவில் பல்வேறு கண்டங்களில் உள்ள நேரத்தின் வேறுபாட்டால் இந்த சம்பவம் நடந்துள்ளது.

உலகிலேயே முதன்முதலாக புத்தாண்டு நியூசிலாந்து நாட்டில்தான் பிறக்கும். அந்த வகையில், நியூசிலாந்தில் 2018ம் ஆண்டு புத்தாண்டு பிறந்தவுடன், ஆக்லாந்து நகரில் இருந்து, அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹவாய் தீவில் உள்ள ஹோனுலு நகருக்கு ஹவாயியன் ஏர்லைன் எச்ஏ446 என்ற விமானம் புறப்பட்டது.

புத்தாண்டு பிறந்து சரியாக 12.05 க்கு புறப்பட்ட விமானம், ஹவாய் தீவின் ஹோனுலு தீவில் 2017ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி  9.45 மணிக்கு தரையிறங்கியது. ஏறக்குறைய நியூசிலாந்துக்கும், ஹவாய் தீவுக்கும் இடையே 23 மணி நேர இடைவெளி இருந்ததால் இந்த சம்பவம் நடந்தது.

விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் 2018ம் ஆண்டு புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி விட்டு, மீண்டும் 2017ம் ஆண்டில் தரையிறங்கியதை நினைத்து அதிர்ச்சியும், அதே சமயம், வித்தியாசமாக உணர்வதாகவும் மீண்டும் புத்தாண்டை கொண்டாடப் போவதாக உற்காசமாகத் தெரிவித்தனர்.

இதேபோல, ஆக்லாந்து நகரில் இருந்து என்.இசட்40 என்ற விமானம், பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரெஞ்ச்பாலினீசியா தீவில் உள்ள பப்பிடீ நகருக்கு சென்றது. அந்த விமானம், 2018ம் ஆண்டு காலை 10.25 மணிக்குஆக்லாந்தில் இருந்து புறப்பட்டு 2017ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி மாலை 4.25 மணிக்கு பப்படீ நகரில் தரையிறங்கியது.

மேலும், ஆசியாவில் கண்டத்தில் உள்ள சீன தைப்பே நகரில் இருந்து 2018ம் ஆண்டு புறப்பட்ட விமானங்கள் 2017ம் ஆண்டு அமெரிக்கா, கனடாவில் தரையிறங்கியது.

தைப்பே நகரில் இருந்து 2018ம் ஆண்டு புறப்பட்ட விமானம் கனடாவின் வேன்கூவர் நகரிலும், சீட்டல்நகரிலும், லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 2017ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி தரை இறங்கியது. இதில் பயணித்த பயணிகள் புத்தாண்டில் புறப்பட்டு, 2017ம் ஆண்டில் தரையிறங்கிய அனுபவத்தை நினைத்து புன்னகைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios