கடும் பனிமூட்டம் ஏற்பட்தால், அடுத்தடுத்து 50 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி  பெரும் பித்து ஏற்பட்டது. இதில், 8 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

டெல்லி - அரியானா இடையே ரோடக் - ரேவரி நெடுஞ்சாலையில் இன்று கடும் பனிமூட்டம் நிலவியது.  சாலையில் செல்லும் வாகனங்களுக்கு புகை மண்டலம் போல் காட்சியளித்தது. இதனால், நேருக்குநேர் மோதி 2 வாகனங்கள் விபத்துக்குள்ளானது. 

பனிமூட்டத்தால் விபத்து ஏற்பட்டதை அறியாமல், அவ்வழியாக வத் வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்றாக பயங்கரமாக மோதி கொண்டன. இதில் பள்ளி வாகனம் உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட வாகனங்கள் விபத்தை சந்தித்தன. இந்த விபதில் 8 பேர், சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்து, அரியானா வேளாண் துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் தன்கர், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுருபவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரண வழங்குவதாக அரியானா அரசு அறிவித்துள்ளது. அரியானா, டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. மிகக் குறைந்த அளவே வெளிச்சம் உள்ளது.