73வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு அவரது மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பலர் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

மோடி 1950 செப்டம்பர் 17 அன்று குஜராத்தின் வாட்நகரில் பிறந்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) 73வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியல் வட்டாரங்களில் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. அவரது சகாக்கள் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், எஸ். ஜெய்சங்கர் உட்பட பல தலைவர்கள் அவருக்கு வாழ்த்து கூறி, அவரது தலைமையைப் பாராட்டியுள்ளனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரை "புதிய இந்தியாவின் சிற்பி" என்று பாராட்டியுள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கொண்டாட்டங்களை பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் மோடியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் கூறி டிஜிட்டல் கொண்டாட்டத்தை மேற்கொண்டிருக்கின்றன. #HappyBdayModiji என்ற ஹேஷ்டேக் உடன் வாழ்த்துக்களை தெரிவிக்க பாஜக கேட்டுக்கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடிக்கு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து:

ஜனாதிபதி திரௌபதி முர்மு: “இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிறந்தநாளில் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நல்வாழ்த்துக்களும். அமிர்த காலத்தில் உங்களின் தொலைநோக்குப் பார்வையுடனும், வலிமையான தலைமையுடனும், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நீங்கள் வழி வகுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவும், உங்கள் அற்புதமான தலைமைத்துவத்தால் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து பயனளிக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நகையை அடகு வைப்பதைத் தடுத்த மனைவி... கழுத்தை நெறித்துக் கொன்று கோடரியால் கூறு போட்ட கணவர்!

Scroll to load tweet…

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: வரலாற்றில் முதல்முறையாக, ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் நாட்டின் வளர்ச்சியுடன் இணைக்கும் அற்புதமான பணியை பிரதமர் மோடி செய்துள்ளார். நாட்டின் கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்க்கையை வறுமையின் சாபத்தில் இருந்து விடுவிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த மோடி ஜி இன்று 'தீன்மித்ரா' என்று அழைக்கப்படுகிறார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா: மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், உலக நலனுக்காகவும் உழைக்கும் மனப்பான்மை, உலக அளவில் இந்தியாவை நிலைநிறுத்தியுள்ளது. இதே ஆற்றலுடன் நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய கடவுள் உங்களுக்கு பலத்தை வழங்கட்டும்.

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்: “புதிய இந்தியாவின் சிற்பியான மா பாரதியின் சிறந்த பக்தருக்கு, வளர்ந்த இந்தியாவை கனவு காண்பவருக்கு, ‘ஒரே இந்தியா - சிறந்த இந்தியா’ என்று கூறிய உலகின் மிகப் பிரபலமான அரசியல்வாதிக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாட்டின் புகழ்பெற்ற பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜிக்கு வாழ்த்துகள்! 'வளர்ந்த இந்தியாவை' உருவாக்குவதற்கான உங்களின் அர்ப்பணிப்பும் தொலைநோக்கு பார்வையும் ஒப்பற்றது. பகவான் ஸ்ரீராமரின் அருளால், நீங்கள் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும். உங்கள் வெற்றிகரமான தலைமையை நாங்கள் அனைவரும் தொடர்ந்து பெறவேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை.

இலவசமாக ஆதார் அப்டேட் செய்வதற்கான அவகாசம் 2வது முறையாக நீட்டிப்பு!

Scroll to load tweet…

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருக்க இறைவன் ஆசிர்வதிக்கட்டும்.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்: பிரதமர் நரேந்திர மோடி ஜியின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு மக்களுடன் இணைந்து அவரைக் கொண்டாடுங்கள். அவரது தொலைநோக்குப் பார்வையும், உத்வேகம் தரும் தலைமையும் நாட்டை மாற்றியமைத்து, உலக அரங்கில் நமது நிலையை உயர்த்தியுள்ளது. அவர் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், தேசத்திற்கு இன்னும் பல ஆண்டுகள் சேவையாற்றவும் பிரார்த்தனை செய்யுங்கள்.

மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ்: பாரதத்தின் மிக தொலைநோக்கு பார்வையும், இரக்கமும், உலகின் மிகவும் பிரபலமான தலைவருமான பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்குவானாக.

பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் பிரபலமான படம் இதுதான்!