Asianet News TamilAsianet News Tamil

நகையை அடகு வைப்பதைத் தடுத்த மனைவி... கழுத்தை நெறித்துக் கொன்று கோடரியால் கூறு போட்ட கணவர்!

கொலை செய்தவர் ஆதாரங்களை மறைக்கும் திட்டத்துடன் உடலை ருஷிகுல்யா ஆற்றின் கரைக்குக் கொண்டு சென்று கோடரியால் துண்டு துண்டுடாக வெட்டி ஆற்றில் வீசியிருக்கிறார்.

Odisha man kills wife, chops body into 6 pieces sgb
Author
First Published Sep 17, 2023, 12:01 PM IST

ஒடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டத்தில் தனது மனைவியைக் கொன்று உடலை ஆறு துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய 28 வயது தொழிலாளி ஒருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கிறார்.

முதற்கட்ட விசாரணையின்படி, பகபன்பூர் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் நாராயண் முலி, தனது 22 வயது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தாகக் கூறப்படுகிறது. தொழில் தேவைக்காக தன்னிடம் உள்ள தங்கச் சங்கிலியை விற்று பணம் பெறுவதற்கு மறுத்ததால் மனைவிக்கும முலிக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு தான் நாராயண் முலி - புலி இருவருக்கும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் நடந்துள்ளது. ஜாகிலிபதார் கிராமத்தைச் சேர்ந்த புலியின் தாயார் ஜுனு முலி, தனது மருமகன் மீது வியாழக்கிழமை காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து இந்த கொடூரமான கொலை வெளிச்சத்துக்கு வந்தது.

இலவசமாக ஆதார் அப்டேட் செய்வதற்கான அவகாசம் 2வது முறையாக நீட்டிப்பு!

Odisha man kills wife, chops body into 6 pieces sgb

நாராயண் முலி, புலியின் பெற்றோர் மற்றும் போலீசாரிடம் தனது மனைவி காணாமல் போய்விட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், போலீசார் நடந்திய விசாரணையில் நாராயண் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

முலி தான் செய்த கொலைக்கான ஆதாரங்களை மறைக்கும் திட்டத்துடன் மனைவியின் உடலை ருஷிகுல்யா ஆற்றின் கரைக்குக் கொண்டு சென்று கோடரியால் ஆறு துண்டுகளாக வெட்டிக் கூறு போட்டு ஆற்றில் வீசியதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

போலீசார் முலி பயன்படுத்திய கோடரியை பறிமுதல் செய்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஆற்றில் வீசப்பட்ட புலியின் உடல் உறுப்புகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என கஞ்சம் காவல்துறை கண்காணிப்பாளர் ஜக்மோகன் மீனா தெரிவித்துள்ளார்.

வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலே UPI பேமெண்ட் செய்யலாம்! HDFC, ICICI வங்களில் புதிய வசதி அறிமுகம்!

Follow Us:
Download App:
  • android
  • ios