வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலே UPI பேமெண்ட் செய்யலாம்! HDFC, ICICI வங்களில் புதிய வசதி அறிமுகம்!

வங்கிகளும் கணக்கு வைத்திருப்பவர்களின் தகுதியின் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை கிரெடிட் லைன் வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

UPI now, pay later: HDFC Bank and ICICI Bank start credit on UPI sgb

இந்திய ரிசர்வ் வங்கியானது UPI மூலம் வங்கிகளில் கிரெடிட் லைன்ல பணப் பரிவர்த்தனைகளுக்கு வழி வகுத்துள்ளதால், வங்கிக் கணக்கில் போதுமான நிதி இல்லாவிட்டாலும் UPI மூலம் பணம் செலுத்தலாம்.

இப்போது வரை, UPI பயனர்கள் தங்கள் சேமிப்புக் கணக்குகள், ஓவர் டிராஃப்ட் கணக்குகள், ப்ரீபெய்ட் வாலட்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளை மட்டுமே UPI வசதியுடன் இணைத்து பரிவர்த்தனை செய்ய முடியும். இருப்பினும், கிரெடிட் லைன் முறையில் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

இலவசமாக ஆதார் அப்டேட் செய்வதற்கான அவகாசம் 2வது முறையாக நீட்டிப்பு!

செப்டம்பர் 4, 2023 அன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி, UPI பயனர்களுக்கு வங்கிகள் கிரெடிட் லைன் வசதியை வழங்கலாம் என்று கூறியது. இதன் மூலம் பயனர்கள் முன் அனுமதி பெற்ற கிரெடிட் லைனில் இருந்து செலவு செய்து, நிலுவைத் தொகையை பின்னர் செலுத்தலாம்.

UPI now, pay later: HDFC Bank and ICICI Bank start credit on UPI sgb

இந்த வசதியின் கீழ், வாடிக்கையாளரின் தனிப்பட்ட முன் அனுமதியுடன் அவர்கள் கிரெடிட் லைன் மூலம் UPI வசதியை பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். வங்கிகளால் வழங்கப்படும் இந்த கடன் வரிகளை உங்கள் UPI கணக்குடன் இணைக்கவும் வாய்ப்பு வழங்கும்.

வங்கிகள் வாடிக்கையாளர்களின் கடன் தகுதியை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் இந்த வசதியை வழங்கும். இந்த வசதியை ஹெச்.டி.எப்.சி. (HDFC) மற்றும் ஐசிஐசிஐ (ICICI) வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. ஹெச்.டி.எப்.சி. வங்கி இதனை UPI Now Pay Later என்ற பெயரிலும் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ICICI PayLater என்ற பெயரிலும் குறிப்பிடுகின்றன.

இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் UPI வசதி கொண்ட அனைத்து மொபைல் பேமெண்ட் செயலிகள் மூலம் இந்த  வசதியை பயன்படுத்தப்படலாம். இரு வங்கிகளும் கணக்கு வைத்திருப்பவர்களின் தகுதியின் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை கிரெடிட் லைன் வரம்பை நிர்ணயித்துள்ளன.

இதுதான் ஜெமினி! சாட்பாட்களை இயக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு மாடல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios