Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் பிரபலமான படம் இதுதான்!

இந்தியாவின் சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு 'இந்தியா நிலவில் தடம்பதித்தது' என்ற தலைப்பில் மோடி பகிர்ந்துகொண்ட வைரலான படத்தையும் பிரக்ஞானந்தாவுடன் இருக்கும் படம் மிஞ்சிவிட்டது.

PM Modi photo with Praggnanandhaa around chess-board most liked Instagram image in recent times sgb
Author
First Published Sep 17, 2023, 1:22 PM IST

சமீபகாலமாக பிரதமர் மோடியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. அதில் மோடியும் இந்தியாவின் டீன் ஏஜ் அதிசயமான பிரக்ஞானந்தாவும் ஒரு பெரிய சதுரங்கப் பலகைக்கு எதிரே அமர்ந்திருந்தனர். செஸ் உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு பிரக்ஞானந்தாவை சந்தித்த பிறகு நரேந்திர மோடி இந்த படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் பிரக்ஞானந்தாவின் பெற்றோருடன் பிரதமர் பேசுவது, பதக்கத்தைப் பார்ப்பது போன்ற படங்களும் இடம் பெற்றிருந்தன. 

'பிரக்ஞானந்தா மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஒரு படம். இது எப்போதும் ஊக்கமளிக்கும்' என்ற தலைப்பில் மோடி அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் பிரதமருக்கு பாராட்டு தெரிவித்தும் ஆயிரக்கணக்கானோர் படத்தின் கீழ் கருத்துகளை எழுதியுள்ளனர்.

இதுதான் ஜெமினி! சாட்பாட்களை இயக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு மாடல்!

இந்தப் படத்தை 43 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். நரேந்திர மோடியின் இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்தில் அதிகம் லைக் செய்யப்பட்ட படம் இதுதான். இந்தியாவின் சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு 'இந்தியா நிலவில் தடம்பதித்தது' என்ற தலைப்பில் மோடி பகிர்ந்துகொண்ட வைரலான படத்தையும் பிரக்ஞானந்தாவுடன் இருக்கும் படம் மிஞ்சிவிட்டது. இந்த படத்தை இன்ஸ்டாகிராமில் 42 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். சந்திரயான் சாஃப்ட் லேண்டிங்கின் கிராபிக்ஸ் படமும் 40 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது.

18 வயதான ஆர் பிரக்ஞானந்தா சதுரங்கத்தில் பெரும் சாதனை புரிந்து தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். பிரக்ஞானந்தா தனது முதல் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடியபோதும், உலகின் இரண்டாம் நிலை வீரரான ஹிகாரு நகமுரா, உலகின் மூன்றாம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானோவை போன்றவர்களைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் நார்வேயின் ஜாம்பவான் மேக்னஸ் கார்ல்சனிடம் போராடித் தோற்றார். முதல் இரண்டு கிளாசிக் சுற்றுகளில் உலகின் நம்பர் 1 கார்ல்சனை சமன் செய்த பிரக்ஞானந்தா, டைபிரேக்கரில் தோல்வியை ஒப்புக்கொண்டார். இதன் மூலம் உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த பிரக்னந்தா குடும்பத்தினருடன் பிரதமர் மோடியைச் சந்தித்தார். 

2005ஆம் ஆண்டு நாக் அவுட் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தா. 2000 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில், விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் வென்றபோது, ​​போட்டிகள் 24 வீரர்களுடன் ரவுண்ட் ராபின் முறையில் நடந்ததன.

Honor 90 5G: ஹானர் 90 5ஜி மொபைலில் 200 MP கேமரா... மெர்சலான அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன்!

Follow Us:
Download App:
  • android
  • ios