ஹனுமான் பாடல் விவகாரம்.. MP-கள் ஷோபா மற்றும் தேஜஸ்வி சூர்யா போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டதால் பரபரப்பு!
MP's Detained by Police : ஹனுமான் பாடல் ஒலிக்கப்பட்ட விவகாரத்தில், எம்பிக்கள் ஷோபா கரந்த்லாஜே மற்றும் தேஜஸ்வி சூர்யா ஆகிய இருவரும் தற்போது பெங்களூரு போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் கடவுள் ஹனுமான் சம்மந்தமான பாடலை வாசித்ததாகக் கூறப்படும் கடைக்காரர் ஒருவரை தாக்கியதைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியினர் பெரும் திரளாக திரண்டதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஷோபா கரந்த்லாஜே மற்றும் எம்.பி தேஜஸ்வி சூர்யா ஆகியோரை பெங்களூரு போலீஸார் தடுத்து வைத்துள்ளனர்.
பெங்களுருவில் ஹலசுரு கேட் காவல் நிலையம் அருகே தான் நடந்த இந்தச் சம்பவம் நடந்துள்ளது, பெங்களூரு, நாகர்ட்பேட்டில் அமைந்துள்ள ஹனுமான் பக்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பேரணியில், இதில் பக்தர்களுக்கும், சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதுவே இறுதியில் அந்த கூட்டத்தை மேற்கொண்டு அனுமதிக்க காவல்துறை மறுப்பு சொல்ல வழிவகுத்தது.
பெங்களூருவில் 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை.. கர்நாடக முதல்வர் அதிர்ச்சி தகவல்..
நடந்தது என்ன?
ஒரு மொபைல் கடையின் உரிமையாளரான முகேஷ் மற்றும் அவரது கடையின் அருகே நமாஸின் போது ஹனுமான் சாலிசா இசைப்பதை எதிர்த்ததாகக் கூறப்படும் ஒரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டது. நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, அந்த கடைக்காரர் முகேஷ், நமாஸ் செய்யும் இளைஞர்களின் கோரிக்கைகளை நிராகரித்தபோதுதான் பதற்றம் அதிகரித்துள்ளது.
இறுதியாக முகேஷ் அவரது கடையில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சம்பவம் குறித்து ஹலசுரு கேட் காவல் நிலையம் விரைந்து விசாரணை நடத்தி, சம்பவ இடத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் பல இளைஞர்களைக் கைது செய்தனர்.
இருப்பினும் இந்த விவகாரம் இந்து உணர்வுகள் மீதான தாக்குதலாக கருதப்பட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், ஒரு கட்டத்தில் பாஜக தலைவர் சுரேஷ்குமார் அவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். மேலும் இந்த குழப்பங்களுக்கு மத்தியில் தான், எம்.பி ஷோபா கரந்த்லாஜே மற்றும் எம்.பி தேஜஸ்வி சூர்யா ஆகியோரை போலீசார் காவலில் வைத்தது கூச்சலை மேலும் தூண்டியது. கட்சி ஆதரவாளர்கள், அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்தும், உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது: தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல்!